Home /News /entertainment /

கொரோனா பாதிப்பு : ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி!

கொரோனா பாதிப்பு : ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி!

ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ்

கொரோனா தடுப்பு பணிகளுக்கு திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து வாடுவோருக்கு ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

    இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே இந்த நெருக்கடியான சூழ்நிலையை சமாளிக்க நிதி உதவி அளிக்குமாறு மக்களிடம் மத்திய, மாநில அரசுகள் கோரிக்கை வைத்திருந்தன.

    அதற்கேற்ப கொரோனா தடுப்பு பணிகளுக்கு திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

    அந்தவகையில் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி அளித்துள்ளார். அதில், அதில் பிரதமர் நிவாரண நிதி உதவியாக ரூ.50 லட்சம், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் மற்றும் படப்பிடிப்பு ரத்தால் பாதிக்கப்பட்டு வேலைஇழந்த சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.50 லட்சம், நடன இயக்குநர்கள் சங்கத்துக்கு ரூ.50 லட்சம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சம், வாழ்வாதாரத்தை இழந்துவாடும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு ரூ.75 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார்.



    முன்னதாக நடிகர் அஜித் ரூ.1.25 கோடி நிதியுதவி அளித்திருந்தார். அதில், பிரதமர் நிவாரண நிதி உதவியாக ரூ.50 லட்சம், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் மற்றும் படப்பிடிப்பு ரத்தால் பாதிக்கப்பட்டு வேலைஇழந்த சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிக்க: கொரோனா பாதிப்பு : வாழ்வாதாரத்தை இழந்த நடிகர்களுக்கு யோகி பாபு உதவி




     
    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Raghava lawrence

    அடுத்த செய்தி