தூய்மைப் பணியாளர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்திய ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ்

தூய்மைப் பணியாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தி உதவியுள்ளார் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ்.

 • Share this:
  கொரோனா காலகட்டத்தில் தடுப்பு பணிகளுக்காக பல திரைத்துறை பிரபலங்களும் நிதியுதவி அளித்தனர். அவர்களில் அதிகபட்சமாக 3 கோடி ரூபாய் அளித்தார் ராகவா லாரன்ஸ். அதுமட்டுமின்றி அம்மா உணவகங்களுக்கு ரூ.50 லட்சம், நடிகர் சங்கத்துக்கு ரூ.25 லட்சம், விநியோகஸ்தர்களுக்கு ரூ.15 லட்சத்துக்கான காசோலையையும் ராகவா லாரன்ஸ் வழங்கினார்.

  மேலும் பலரிடமிருந்து உதவி வேண்டி தனக்கு அழைப்பு வருவதாகவும், உதவ நினைப்பவர்கள் பொருட்களாக அனுப்பலாம் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த், பார்த்திபன், விஜய் மில்டன் உள்ளிட்டோர் அரிசி மூட்டைகளை அனுப்பி உதவி செய்தனர். மேலும் பலரும் ராகவா லாரன்ஸின் கோரிக்கையை ஏற்று பொருட்களாக கொடுத்து உதவினர். இதை தனது அறக்கட்டளை மூலம் தேவைப்பட்ட மக்களுக்கு உதவினார் ராகவா லாரன்ஸ்.

  இந்நிலையில் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிப்பதற்காக பெறும் சம்பளத்திலிருந்து ரூ.25 லட்சத்தை தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்குவதாக கடந்த ஏப்ரல் மாதத்தில் ராகவா லாரன்ஸ் அறிவித்தார்.

  இதையடுத்து தூய்மைப் பணியாளர்கள் தங்களுடைய அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்களை 6382481658 என்கிற எண்ணுக்கு அனுப்பும்படி ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் அறிவித்தார்.

  இந்நிலையில் 3,385 தூய்மைப் பணியாளர்களுக்கு தலா ரூ.750 வீதம் ரூ.25,38,750 தொகையை தூய்மைப் பணியாளர்களின் வங்கிக் கணக்கு அனுப்பியுள்ளதாக கதிரேசன் தெரிவித்துள்ளார். அதை ராகவா லாரன்ஸூம் ட்வீட் செய்துள்ளார்.  மேலும் படிக்க: ரசிகரின் தந்தை மரணம்... இறுதிச் சடங்கில் பங்கேற்ற சந்தானம்


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Sheik Hanifah
  First published: