• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • இனி காஞ்சனாவை நான் எடுக்க மாட்டேன்... அதிர்ச்சி கொடுத்த ராகவா லாரன்ஸ்

இனி காஞ்சனாவை நான் எடுக்க மாட்டேன்... அதிர்ச்சி கொடுத்த ராகவா லாரன்ஸ்

இந்த உலகத்தில் பணத்தை விட மரியாதை தான் முக்கியம், அதானல் காஞ்சனா ரீமேக்கில் இருந்து விலகுகிறேன் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்

  • News18
  • Last Updated :
  • Share this:
    காஞ்சனா படத்தின் ரீமேக்கான லக்‌ஷ்மி பாம் திரைப்படத்தை நான் இயக்க மாட்டேன் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்

    ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி படத்தின் இரண்டாவது பாகமாக 2011-ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் காஞ்சனா.

    8 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் ஈடுபட்டுள்ளார் ராகவா லாரன்ஸ். ‘லக்‌ஷ்மி பாம்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகர் அக்‌ஷய்குமார் நாயகனாக நடிக்கிறார். அவருடன் கியாரா அத்வானி ஜோடி சேர்ந்துள்ளார்.

    இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது, படம் 2020-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இயக்குநர் ராகவா லாரன்சின் பெயர் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் படத்தில் இருந்து விலகுவதாக இயக்குநர் ராகவா லாரன்ஸ் அறிவித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்



    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிகையில், ‘ இந்த உலகத்தில் பணத்தை விட மரியாதை தான் முக்கியம், அதானல் காஞ்சனா ரீமேக்கில் இருந்து விலகுகிறேன். படத்தில் இருந்து விலகுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது அதை சொல்ல விரும்பவில்லை. ஆனால் முக்கிய காரணம் என்னவென்றால் என்னுடைய அனுமதி இல்லாமல் நேற்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது வேறொருவர் சொல்லி தான் எனக்கு தெரிந்தது. ஒரு இயக்குநருக்கு தெரியாமல் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருப்பது வேதனையை அளிக்கிறது. அந்த போஸ்டர் நன்றாகவும் இல்லை. நான் நினைத்தால் இந்த படத்தை எடுக்கவிட முடியாமல் செய்ய முடியும் ஆனால் நான் அப்படி செய்ய மாட்டேன். அக்‌ஷய் குமார் மீது மரியாதை வைத்திருக்கிறேன். அதனால் இப்படத்தின் கதையை அவரிடம் தருகிறேன். அவர் வேறு யாரையாவது வைத்து எடுத்துகொள்ளலாம். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.





    Also watch

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Prabhu Venkat
    First published: