சமீபத்தில் திருமண வாழ்க்கையில் நுழைந்த காஜல் அகர்வாலுடன், ராதிகா சரத்குமார் இருக்கும் படங்கள் வைரலாகி வருகின்றன.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழும் காஜல் அகர்வால் கடந்த ஆண்டு அக்டோபரில் தொழிலதிபர் கெளதம் கிட்ச்லுவை திருமணம் செய்துக் கொண்டார். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்துக் கொண்ட இந்த திருமண விழாவில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், திருமண விழா, ஹனிமூன் கொண்டாட்டங்களை முடித்து விட்டு கடந்த சில வாரங்களாக மீண்டும் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார் காஜல். அதோடு ஒரு சில படங்களில் புதிதாக ஒப்பந்தமும் ஆகியுள்ளார்.
பிரபு தேவா நடித்த 'குலேபகவலி' படத்தை இயக்கிய கல்யாணின் புதிய படத்திலும் காஜல் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் ராதிகா சரத்குமாரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் படபிடிப்பில் காஜலும், ராதிகாவும் எடுத்துக் கொண்ட படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அழகான புதிய மணமகளான காஜலுடன் பணியாற்றுவதில், தான் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டு அந்தப் படங்களை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் ராதிகா.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்