ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஜெய்ப்பூரில் நடக்கும் டாப்ஸி - விஜய் சேதுபதி பட ஷூட்டிங்

ஜெய்ப்பூரில் நடக்கும் டாப்ஸி - விஜய் சேதுபதி பட ஷூட்டிங்

விஜய் சேதுபதியுடன் ராதிகா

விஜய் சேதுபதியுடன் ராதிகா

ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் திரைப்பட படப்பிடிப்பில் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் மற்றும் நடிகரான சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் டாப்ஸி நாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடிக்க அவருடன் யோகி பாபு, ராதிகா, ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

  இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, ராதிகா உள்ளிட்டோர் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளனர். அதற்கான புகைப்படத்தை நடிகை ராதிகா தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

  லாக்டனில் வெள்ளை தாடியுடன் தோற்றமளித்த நடிகர் விஜய் சேதுபதி, இந்தப் படத்துக்காக புதிய லுக்குக்கு மாறியுள்ளார்.

  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. ஏ.எல்.விஜய்யிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தீபக் சுந்தர்ராஜன், டாப்ஸி தான் தனது கதைக்கு பொருத்தமாக இருப்பார் என்று ஒருவருடமாக காத்திருந்து அவரிடம் தேதிகளை கைப்பற்றியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

  தமிழில் ஆடுகளம், வந்தான் வென்றான், ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்த டாப்ஸி நீண்ட இடைவெளிக்குப் பிறகு கேம் ஓவர் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். இந்தப் படத்தை அடுத்து காமெடியை மையப்படுத்திய படத்தில் தீபக் சுந்தர்ராஜன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஜெயம் ரவியுடன் ‘ஜனகனமன’ படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: Kollywood, Taapsee Pannu, Vijay sethupathi