Home /News /entertainment /

சின்னத்திரையில் இருந்து விலக ராதிகா திடீர் முடிவு

சின்னத்திரையில் இருந்து விலக ராதிகா திடீர் முடிவு

ராதிகா

ராதிகா

அவர் ஒரு நடிகை என்பதைத் தவிர, வெற்றிகரமான தயாரிப்பாளரும் கூட.

    சின்னத்திரையில் இருந்து தான் படிப்படியாக விலகவிருப்பதாக நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

    அண்மையில் வாணியாம்பாடியில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் ராதிகா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவரது கணவர் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை நிறுவியவர். அந்தக் கட்சியின் மாநில மகளிர் பிரிவின் செயலாளர் பதவியை ராதிகா வகித்து வருகிறார். தற்போது மாநில சட்டசபை தேர்தல் நெருங்குகிறது. இதனால் அரசியலில் அதிக நேரம் ஒதுக்க ராதிகா திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் தனது கணவர் சரத்குமாருக்கு பக்க பலமாய் இருந்து செயல்பட அவர் விரும்புகிறார்.

    ’சுல்தான்’ அட்டகாச அப்டேட் – மகிழ்ச்சியில் கார்த்தி ரசிகர்கள்!

    அறிக்கைகளின்படி, ராதிகா முற்றிலும் சின்னத்திரையில் இருந்து வெளியேறப் போவதில்லை. அவர் ஒரு நடிகை என்பதைத் தவிர, வெற்றிகரமான தயாரிப்பாளரும் கூட. அதனால் அவர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைத் தயாரிப்பார். மறுபுறம், பெரிய திரையில் நடிப்பதை விட்டுவிட மாட்டேன் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

    ஜெயலலிதாவை தொடர்ந்து இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கனா…

    தற்போது, சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியலில் சாரதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ராதிகா. இதனை அவரது தயாரிப்பு நிறுவனம் தான் தயாரிக்கிறது. இது தவிர தங்கவேட்டை, பங்காரம் மீ கோசம் மற்றும் கோடீஸ்வரி ஆகிய நிகழ்ச்சிகளையும் அவர் தொகுத்து வழங்கியுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Radhika sarathkumar

    அடுத்த செய்தி