ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Venu Arvind : வேணு அரவிந்தின் உடல் நிலை எப்படி இருக்கு? நடிகை ராதிகா கொடுத்த அப்டேட்..

Venu Arvind : வேணு அரவிந்தின் உடல் நிலை எப்படி இருக்கு? நடிகை ராதிகா கொடுத்த அப்டேட்..

ராதிகா சரத்குமார்

ராதிகா சரத்குமார்

வேணு அரவிந்த் கோமா நிலையில் இல்லை என நடிகை ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

வெள்ளித்திரையில் கோலோச்சிய நடிகை ராதிகா சரத்குமார், சின்னத்திரையிலும் உட்சபட்ச நட்சத்திரமாக வலம் வந்தார். அவரின் ’சித்தி’, ’வாணி ராணி உள்ளிட்ட சீரியல்கள் மெஹா ஹிட் அடித்தன. சீரியல்களை சொந்தமாக தயாரித்து, நடித்த ராதிகா சரத்குமாருடன் ‘வாணி ராணி’ உள்ளிட்ட முக்கிய சீரியல்களில் வேணு அரவிந்தும் நடித்துள்ளார். தற்போது உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கும் அவர், சென்னை தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல் நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருந்தன. குறிப்பாக, வேணு அரவிந்த் கோமாவில் இருப்பதாகவும், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்பட்டது.

இது குறித்து நடிகை ராதிகா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், மீடியா நிறுவனங்கள் வேணு அரவிந்த் உடல் நிலை குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Photos : கூலிங் கிளாஸ் அணிந்து கெத்து போஸ் கொடுத்த ராய் லட்சுமி - போட்டோஸ்

அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு, நலமில்லாமல் இருப்பது உண்மை எனத் தெரிவித்துள்ள ராதிகா, சுய நினைவுடன் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். அவருடைய மனைவியுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை பதிவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அவர் விரைவாக உடல் நலம் பெற்று திரும்பி வர அனைவரும் பிராத்தனை செய்யும்மாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில், " மீடியாக்களில் வேணு அரவிந்த் கோமா நிலையில் இருப்பதாக வெளியாகியுள்ள செய்தி கவலையளிக்கிறது. இது முற்றிலும் தவறனாது. நான் அவருடைய மனைவியிடம் வேணு அரவிந்த் உடல் நிலை குறித்து நலம் விசாரித்து வருகிறேன். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும் சுய நினைவுடன் இருக்கிறார். மிகவும் நல்ல மனிதர். அவர் விரைவில் நலம் பெற்று வர வேண்டும் என பிரார்த்தனை செய்வோம். தவறான செய்திகள் பரப்புவதை நிறுத்துவோம்" எனக் கூறியுள்ளார். இதன்மூலம் வேணு அரவிந்தின் உடல் நிலை குறித்து பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Also Read : சினேகன்-கன்னிகா திருமண வரவேற்பு நிகழ்ச்சி புகைப்படங்கள்..

செல்வி, வாணி ராணி உள்ளிட்ட நடிகை ராதிகாவின் சீரியல்களில் மட்டுமல்லாது இயக்குநர் சிகரம் பாலச்சந்தரின் நாடகங்களான காதல் பகடை, காசளவு நேசம் உள்ளிட்ட தொடர்களிலும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். அலைப்பாயுதே, என்னவளே ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ள வேணு அரவிந்த், சபாஷ் சரியான போட்டி என்ற படத்தையும் 2011 ஆம் ஆண்டு இயக்கியுள்ளார். மே மாதம் திரைப்படத்தில் நடித்த நடிகர் வினீத்திற்கு டப்பிங்கும் கொடுத்துள்ளார். சக நடிகர், நடிகைகள் அவர் விரைவாக குணமாக வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Radhika sarathkumar