நடிகை ராஷ்மிகா மந்தனா ‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னடா மொழி திரைப்படத்தில் அறிமுகமானார்.பின்பு கன்னட மொழியிலே மூன்று படங்கள் நடித்தார். அதையடுத்து தெலுங்கில் 2018 ஆம் ஆண்டு நடித்த ‘கீதா கோவிந்தம்’ என்ற திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த படம் தெலுங்கு மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்திருந்தது. ராஷ்மிகா, விஜய் தேவரக்கொண்ட ஜோடி அனைவருக்கும் ஃபேவரெட் ஜோடி என்பதால் 2019 ஆம் ஆண்டு ‘டியர் காம்ரெட்’ என்ற படத்தில் மீண்டும் இணைந்து நடித்தனர். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி அடையவில்லை.
இதை தொடர்ந்து தெலுங்கில் பல படங்களில் நடித்தார். பின்பு தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் நடித்திருந்தார். இதுவே ராஷ்மிகாவின் முதல் தமிழ் திரைப்படமாகும். தற்போது ஹிந்தியில் மிஷன் மஜ்னு, குட் பை ஆகிய இரண்டு படங்களிலும் நடிகை ராஷ்மிகா பிசியாக நடித்து வருகிறார்.ராஷ்மிகா மந்தனாவுக்கு அனைத்து மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் ‘ நேஷனல் க்ரஷ்’ என்று அழைக்கப்பட்டார்.
மேலும் நடிகை ராஷ்மிகா தற்போது தெலுங்கில் நடித்து வரும் ‘ஆடவல்லு மீக்கு ஜோகர்லு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். சர்வானந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ராதிகா, குஷ்பு, ஊர்வசி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இந்நிலையில் இந்த படப்பிடிப்பின் போது நடிகை ராதிகா மற்றும் ஊர்வசி செய்யும் லூட்டியை ராதிகா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் ‘ நவராத்திரி சுபராத்திரி கலைமகளும்’ என்ற பாடலுக்கு ராதிகா மற்றும் ஊர்வசி முகபாவனை செய்து ராஷ்மிகாவை கொஞ்சிக்கொண்டே பாடுகின்றனர். இருவருக்கும் இடையில் நிற்கும் ராஷ்மிகா இருவரின் சேட்டையையும் பார்த்து சிரித்துக்கொண்டே இருக்கிறார்.
சமீபத்தில் நடிகை ராஷ்மிகா கோவா மற்றும் மும்பையில் தனக்கான சொந்த வீட்டை வாங்கினார்.
Published by:Tamilmalar Natarajan
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.