ராதிகா சரத்குமார் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடித்ததற்காக மக்கள் நல்வாழ்வுத் துறை இயக்ககம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காதல் மன்னன், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், அமர்க்களம் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய சரண் தற்போது மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் மூலம் பிக்பாஸ் முதல் சீசனில் வெற்றி பெற்ற ஆரவ் நடிகராக அறிமுகமாகிறார்.
மேலும் வட சென்னை பெண் ரவுடி கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமாரும், காவ்யா தாப்பர், நிகிஷா படேல், யோகி பாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். சுரபி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சைமன் கிங் இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் வரும் 29-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் நிலையில், ராதிகா சரத்குமார் படத்தில் புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்ததற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்ககம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில், ராதிகா புகைபிடிக்கும் காட்சிகள் மக்கள் நல்வாழ்வு துறை வகுத்துள்ள விதிகளுக்கு மாறாக அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விளம்பர புகைப்படங்களிலும், முன்னேற்றத்திலும் இடம் பெற்றுள்ள காட்சிகளின் போது எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடாதது, உள்ளிட்ட விதிமுறை மீறல்களில் ராதிகா சரத்குமார் ஈடுபட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உடனடியாக அனைத்து தளங்களில் இருந்தும் இந்த விளம்பரங்களை நீக்கக்கோரி உள்ள மக்கள் நல்வாழ்வு துறை, ஏழு நாட்களுக்குள் ராதிகா சரத்குமார் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Radhika sarathkumar