திரையரங்கு வருவாய் பூஜ்ஜியம் - 40 கோடியை விட்டுத் தந்த சல்மான் கான்!

சல்மான் கான்

இந்தியாவில் கொரோனா தொற்று குறைவாக உள்ள ஒரு சில இடங்களில் மட்டுமே படம் திரையரங்கில் வெளியாகும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சல்மான் கான் நடிப்பில் மே 14 வெளியாவதாக இருந்த ராதே திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. இதனால், முன்பு பேசிய தொகையில் 40 கோடிகளை விட்டுத் தந்துள்ளார் சல்மான்.

வசூல் விஷயத்தில் இந்தியின் சூப்பர் ஸ்டார் சல்மான் கான். அதிக 200 கோடி படங்கள் தந்தவர். பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் நடித்த ராதே படத்தை ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், படம் திரையரங்கில் வெளியாகாது, மன்னிச்சிக்கோங்க என்று ஊரைக்கூட்டி அறிவித்துள்ளார் சல்மான். "ராதேயின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ஸீ ரோ. என்னுடைய படங்களில் இதுவே மோசமான பாக்ஸ் ஆபிஸ்" எனவும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக ராதே படத்தை ரம்ஜானை முன்னிட்டு மே 14 வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஒரே நாளில் திரையரங்கு, ஓடிடி, டிடிஹெச் என மூன்றுவித வெளியீட்டுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. கொரோனா இரண்டாம் அலை அனைத்தையும் கலைத்துப் போட்டது.

Also read... மருத்துவமனை செட்டை கொரோனா நோயாளிகள் பயன்பாட்டு அளித்த ராதே ஷ்யாம் படக்குழு

இந்தியாவில் கொரோனா தொற்று குறைவாக உள்ள ஒரு சில இடங்களில் மட்டுமே படம் திரையரங்கில் வெளியாகும். வெளிநாடுகளிலும் வழக்கத்தைவிட குறைவான திரையரங்குகளில் படம் வெளியாகும். டிடிஹெச் இணைப்பு வைத்திருப்பவர்கள் 299 ரூபாய் கட்டி ஒருமுறை படத்தைப் பார்க்கலாம். ஸீ ஓடிடி தளத்திலும் இதே முறையில் பணம் கட்டி பார்க்கலாம்.

சல்மான் கான் ராதே படத்தின் திரையரங்கு, சேட்டிலைட், டிஜிட்டல் உரிமைகளை ஸீ நிறுவனத்துக்கு 230 கோடிகளுக்கு அளித்திருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில், 40 கோடிகள் குறைத்து 190 கோடிகளுக்கு டீல் முடிவாகியுள்ளதுபட வெளியீட்டு தேதி மற்றும் பிற விவரங்கள் குறித்து முறைப்படியான அறிவிப்பை சில தினங்களில் எதிர்பார்க்கலாம்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: