• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • வெளிநாடுகளில் 750 திரையரங்குகளில் வெளியான சல்மான் கானின் ராதே!

வெளிநாடுகளில் 750 திரையரங்குகளில் வெளியான சல்மான் கானின் ராதே!

ராதே

ராதே

இந்தியாவில் ரசிகர்கள் ஸீபிளக்ஸில் 299 ரூபாய் செலுத்தி ஒருமுறை படத்தைப் பார்க்கலாம். சில குறிப்பிட்ட டிடிஹெச் சேவைகளிலும் 299 ரூபாய் கட்டி படத்தைப் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சல்மான் கான் நடிப்பில் பிரபுதேவா இயக்கியிருக்கும் மூன்றாவது படம் ராதே - யுவர் மோஸ்ட் வான்டட் பாய். ஆக்ஷன் படமான இது இன்று வெளிநாடுகளில் வெளியாகியுள்ளது.

ரம்ஜானுக்கு தனது படத்தை வெளியிடுவதை ஒரு கொள்கை முடிவாகவே வைத்திருக்கிறார் சல்மான் கான். சிலநேரம் இது தவறினாலும், ரம்ஜான் என்றால் சல்லு பாய் படம் என ரசிகர்கள் மனதில் ஊறிவிட்டது. இந்த ரம்ஜானுக்கு ராதே வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட, ராதே திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், படத்தை வாங்கிய ஸீ ஸ்டுடியோஸ் படவெளியீட்டில் உறுதியாக இருந்தது.

திரையரங்கில் ஏற்படும் நஷ்டத்தை ஓடிடியில் சமன் செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கை. இன்று மே 13 அஸ்ஸாம், திhpபுரா போன்ற ஒரு சில மாநிலங்களில் ஒருசில திரையரங்குகளில் மட்டுமே ராதே வெளியாகியுள்ளது. தெலுங்கானாவில் திரையரங்குகள் திறக்கப்பட்டிருந்ததால் ராதே படத்தை வெளியிடலாம் என்று நம்பியிருந்தனர். இப்போது அங்கும் ஊரடங்கு அறிவிக்கப்பட ராதே படக்குழு ஏமாற்றமடைந்துள்ளது.

Also read... சாய் பல்லவியின் கதவை தட்டிய பாலிவுட் வாய்ப்பு...!

வெளிநாடுகளில் சுமார் 750 முதல் 800 திரையரங்குகளில் ராதே வெளியாகிறது. யுஏஇ யில் சல்மானின் தபாங் 3 படம் 2019 இல் 450 திரையரங்குகளில் வெளியானது. இந்தமுறை ராதே 350 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சல்மானுக்கு அதிக ரசிகர்கள் உள்ள பஹ்ரைன், ஓமன், குவைத் ஆகிய நாடுகள் லாக்டவுனில் உள்ளன. இங்கு மே 17 முதல் ஒருசில திரையரங்குகளில் ராதே வெளியாகும் என்கிறார்கள். மலேசியா, தாய்லாந்த், மாலத்தீவு, கனடா ஆகிய நாடுகள் லாக் டவுனில் இருப்பதால் ராதே வெளியாகவில்லை.

யுஎஸ்ஏ இல் ராதே 200 திரையரங்குகளிலும், ஆஸ்ட்ரேலியா, நியூசிலாந்தில் 100 க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் வெளியாகியுள்ளது. யுகே யில் மே 17 முதல் 75 திரையரங்குகளில் படம் வெளியாகிறது

இந்தியாவில் ரசிகர்கள் ஸீபிளக்ஸில் 299 ரூபாய் செலுத்தி ஒருமுறை படத்தைப் பார்க்கலாம். சில குறிப்பிட்ட டிடிஹெச் சேவைகளிலும் 299 ரூபாய் கட்டி படத்தைப் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: