Home » News » Entertainment » RADHARAVI TALKS ABOUT RAJINIKANTH POLITICAL ENTRY MSB

ரஜினிகாந்த் பாஜகவுடன் இணைந்து அரசியலுக்கு வருவாரா? - தனது பாணியில் ராதாரவி பதில்!

ரஜினிகாந்த் பாஜகவுடன் இணைந்து அரசியலுக்கு வருவாரா? - தனது பாணியில் ராதாரவி பதில்!
ராதாரவி | ரஜினிகாந்த்
  • Share this:
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு நடிகர் ராதாரவி தனது ஸ்டைலில் பதிலளித்துள்ளார்.

தர்மபுரியில் இன்று தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நல சங்கம் சார்பில் சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா மற்றும் முதல் மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில் பா.ஜ.க பிரமுகரும், பிரபல திரைப்பட நடிகருமான ராதாரவி பங்கேற்று பேசினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராதாரவி,  “நாட்டுப்புற கலைஞர்களுக்கு மத்திய அரசு சார்பில் ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. நான் இத்துறையில் இருப்பதால் அதனை நிச்சயமாக இந்த கலைஞர்களுக்கு பெற்றுத் தருவேன். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து என்னை நீக்கினார்கள். என்னை மீண்டும் நடிகர் சங்கத்தில் இணைக்க நீதிமன்றம் மூலம், நடிகர் சங்க தேர்தலுக்கு தடை பெற்றுள்ளேன். தேர்தலில் போட்டியிடுவது எனது நோக்கமல்ல. நான் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதற்காகவே தடை ஆணை பெற்றுள்ளேன்.


குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவிலுள்ள 130 கோடி மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இச்சட்டத்தை எல்லோரும் ஆதரிக்க வேண்டும். இந்தச் சட்டத்திற்கு கையெழுத்து போடாமல் எதிர்ப்பு தெரிவிப்பது துரோகச்செயல். சிஏஏ.க்கு எதிராக தற்பொழுது நடக்கின்ற போராட்டம் இந்திய நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காக அல்ல. வேறு நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காகவே நடைபெற்று வருகிறது.

குடியுரிமைச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் நன்றாக படிக்க வேண்டும். படிக்காமல் எதையும் செய்யக்கூடாது. தற்பொழுது குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி 3 கோடி பேரிடம் கையெழுத்து பெற்றுள்ளதாக தெரிவிக்கிறார்கள். ஆனால் அதில் விசாரித்தால் ஒருவருக்கும் எதற்காக கையொப்பம் வாங்குகிறார்கள் என்றே தெரியவில்லை. தெரியாமலேயே பெரும்பாலானோர் அதற்காக கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தில் கேட்கப்படும் ஆவணங்கள் பிரதமர் மோடியிடமே இல்லை என சமூக வலை தளங்களில் வருவது தவறு. தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து பெறப்பட்டதாக சமூக வலை தளங்களில் வதந்தி பரப்புகிறார்கள். அப்படி இருந்தால் அது மிகப்பெரிய விஸ்வரூபம் எடுத்திருக்கும். சமூகவலைதளங்களில் வரும் தகவல்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி மூன்று ஆண்டுகளைக் கடந்து, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அதற்காக அவருக்கு முன்பே வாழ்த்துகளை தெரிவித்துவிட்டோம். எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். மக்களுக்கு அவரை மிகவும் பிடித்துவிட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டமன்றத்தில் கூட, குடியுரிமை திருத்தச் சட்டத்தால் யாருக்கு பாதிப்பு இருக்கிறது என்று கூறுங்கள் என அம்மாவைப்(ஜெயலலிதாவை) போலவே சத்தம் போட்டார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் அதற்கு ஒரு பதிலும் சொல்லாமல் ஓடினார். எடப்பாடி பழனிசாமி நன்றாக செயல்பட்டு வருகிறார். மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். நிச்சயமாக மீண்டும் தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி வருவார்” என்றார்.

தொடர்ந்து ரஜினிகாந்த் பாஜகவுடன் இணைந்து அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு, இந்தியாவிலேயே மிக முக்கியமான கேள்வியை என்னிடம் கேட்கிறீர்கள். அதுபற்றி எனக்கு தெரியவில்லை. அவர் தொடர்ச்சியாக அறிக்கைகள் கொடுத்து வருகிறார். மும்பை கலவரம் உள்ளிட்ட எல்லா சம்பவங்களுக்கும் தொடர்ச்சியாக அறிக்கை கொடுத்து வருகிறார். அமெரிக்க ஜனாதிபதி வந்ததற்கு கூட அறிக்கை கொடுப்பார். இருந்தாலும் முடிவு வரட்டும். பார்ப்போம் என ராதாரவி பதிலளித்தார்.

மேலும் படிக்க: அமைதியை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுப்பதாக ரஜினி கூறினார்...! இஸ்லாமிய மதகுருக்கள் பேட்டி
First published: March 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading