இந்தியில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான படம் அந்தாதுன். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் ஆயுஷ்மன் குரானா, ராதிகா ஆப்தே, தபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வசூலை வாரிக்குவித்த இத்திரைப்படம் 3 தேசிய விருதுகளைப் பெற்றது.
இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளார். 2020-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. ‘அந்தகன்’ என்ற டைட்டிலில் உருவாகும் அந்தாதுன் தமிழ் ரீமேக்கை ஜெ.ஜெ.பெஃட்ரிக் இயக்க சந்தோஷ் சிவன் இசையமைக்கிறார். பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார்.
அதேபோல் இத்திரைப்படம் மலையாளத்திலும் ரீமேக் செய்யப்படுகிறது. பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். ஆயுஷ்மன் குரானா கேரக்டரில் நடிகர் பிருத்விராஜ் நடிப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது ராதிகா ஆப்தே நடித்திருந்த கேரக்டரில் நடிக்க ராஷி கண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஜனவரி 27-ம் தேதி முதல் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் கேராளைவைச் சுற்றிய இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.