என்னை குடிபோதைக்கு அடிமையானவன் என்பதா? நெட்டிசனுக்கு மாதவன் பதிலடி

என்னை குடிபோதைக்கு அடிமையானவன் என்பதா? நெட்டிசனுக்கு மாதவன் பதிலடி

நடிகர் மாதவன்

சமூகவலைதளத்தில் தன்னை விமர்சித்த நெட்டிசனுக்கு நடிகர் மாதவன் பதிலடி கொடுத்துள்ளார்.

  • Share this:
தமிழில் அலைப்பாயுதே, மின்னலே படங்களின் மூலம் ரசிகர்களை தன்வசப்படுத்திய மாதவன், இந்தியிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். குறிப்பாக, தனு வெட்ஸ் மனு, த்ரீ இடியட்ஸ், உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் ஏற்று நடித்த கதாப்பாத்திரங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.

மாதவன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மாறா’ திரைப்படம் நாளை ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மார்டின் ப்ராகாட் இயக்கத்தில் துல்கர் சல்மான், பார்வதி மேனன், அபர்ணா கோபிநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘சார்லி’ படத்தின் தமிழ் ரீமேக் தான் ‘மாறா’.பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஷ்ருதி நல்லப்பா இணைந்து, பிரமோத் ஃபிலிம்ஸ் சார்பாகத் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை திலீப் குமார் இயக்கியுள்ளார்.

மாதவனுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க ஷிவதா, மௌலி, அலெக்ஸாண்டர் பாபு, எம்.எஸ்.பாஸ்கர், குரு சோமசுந்தரம், கிஷோர், அபிராமி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்திங்களில் நடித்திருக்கின்றனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் மாதவனை ட்விட்டரில் குறிப்பிட்டு நெட்டிசன் ஒருவர், “மாதவன் ஒரு காலத்தில் எனக்குப் பிடித்த நடிகர். பாலிவுட்டில் அவர் நுழைந்தபோது புதிதாக மலர்ந்த மலர் போல் இருந்தார். ஆனால் இப்போது அவர் திரைத்துறை வாழ்க்கையையும், தனது ஆரோக்கியத்தையும் போதை பழக்கத்தால் அழிப்பதை பார்க்க வருத்தமாக இருக்கிறது. அவரது முகம், கண்ணை பாருங்க.. அதுவே சொல்லும்.” என்று கமெண்ட் பதிவிட்டார்.நெட்டிசனின் இந்த பதிவுக்கு பதிலளித்த நடிகர் மாதவன், “ஓ... இதுதான் உங்க கணிப்பா.. உங்கள் நோயாளிகள் குறித்து கவலைப்படுகிறேன். உங்களுக்கு தான் டாக்டர் அப்பாயின்ட்மெண்ட் தேவைப்படும்.” என்று கூறியுள்ளார். மாதவனின் பதிலுக்குப் பின்னர் அந்த நெட்டிசன் தனது ட்வீட்டை டெலிட் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: