• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • குரூப்-1 தேர்வில் பரியேறும் பெருமாள் திரைப்படம் குறித்து கேள்வி

குரூப்-1 தேர்வில் பரியேறும் பெருமாள் திரைப்படம் குறித்து கேள்வி

பரியேறும் பெருமாள்

பரியேறும் பெருமாள்

குரூப்-1 தேர்வில் பரியேறும் பெருமாள் திரைப்படம் குறித்த கேள்வி இடம் பெற்றுள்ளது.

  • Share this:
    சினிமாவை பொறுத்தவரை சமூக பிரச்சனைகளை மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் சில படங்கள் மட்டுமே வெளிவருகின்றன. அந்த வகையில் சாதி மற்றும் ஏற்ற தாழ்வுகள் நிறைந்த சமூகத்தில் முன்னேற துடிக்கும் இளைஞனின் பிரச்சனை எடுத்துக்கூறும் படமாக பரியேறும் பெருமாள் திரைப்படம் அமைந்தது.

    இந்த திரைப்படம் 2018 ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளிவந்தது. இந்த படத்தில் கதிர், ஆனந்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பரியேறும் பெருமாள் திரைப்படம் பல விருதுகளை வாங்கி குவித்துள்ளது. படம் வெளியான நாள் முதல் இன்று வரை தமிழ் சினிமாவில் நீங்கா இடத்தை பிடித்த திரைப்படமாக பரியேறும் பெருமாள் திரைப்படம் திகழ்கிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் இன்று நடைப்பெற்ற குரூப் 1 தேர்வு கேள்வியில் இந்த படம் பற்றிய கேள்வி இடம் பெற்றுள்ளது.

    அந்த கேள்வியில் ‘தலைசிறந்த படைப்பான பரியேறும் பெருமாள் என்ற தமிழ் திரைப்படம் பற்றிய விமர்சனம் குறித்து கீழ்காணும் கூற்றுகளில் தேர்வு செய்யவும்’ என்றுக் கூறி சில ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.



    தற்போது அந்த கேள்வியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பதிவிட்டு ட்விட்டரில் பலரும் பரியேறும் பெருமாள் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

     





    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: