புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் புதிதாக என்ட்ரி கொடுக்க போகும் பிரபலம் யார் தெரியுமா?

புதுப்புது அர்த்தங்கள்

லியோனிக்கு பதிலாக நடிக்கும் நடிகரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

 • Share this:
  வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என இரண்டு துறைகளிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகை தேவயானி. இவர், தமிழ் சினிமாவில் காதல் கோட்டை, சூர்யவம்சம், பிரண்ட்ஸ், நீ வருவாய் என உள்பட பல ஹிட் படங்களை கொடுத்தவர். தனக்கென உரித்தான ஸ்டைலில் நடித்து தமிழ் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். பின்னர், திரைப்படங்களில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் போன பிறகு சின்னத்திரை பக்கம் நுழைந்தார். அங்கும் இவருக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.

  இவர் நடித்த முதல் சீரியல் கோலங்கள் ஆகும். இந்த சீரியலுக்கு அப்போது அவ்வளவு மவுசு. அந்த ஹிட் சீரியலுக்கு பிறகு முத்தாரம், ராசாத்தி உள்ளிட்ட சீரியலில் நடித்திருந்தார். பின்னர் சில படங்களிலும் சில ரோல்களில் நடித்திருந்தார். ஆனால், சீரியல் மற்றும் படங்கள் ஆகிய இரு துறைகளிலும் நடிப்பதை விட்டுவிட்டார். பல வருடங்கள் கழித்து மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்க ஆரம்பித்தவர், இப்பொது ஜீ தமிழில் புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் லீடிங் ரோலில் நடித்துவருகிறார்.

  "சினேகா அபார்ட்மெண்டில்" வசிக்கும் ஒரு விதவை பெண் லட்சுமி என்கிற கதாபாத்திரத்தில் தான் தேவயானி நடித்து வருகிறார். தன் குடும்பத்தை கவனித்து கொள்வதோடு, எல்லா வாழ்க்கை பிரச்சினைகளையும் அமைதியுடன் எதிர்கொள்ளும் ஒரு பெண்ணாக நடித்து வருகிறார். தனது மகன் சந்தோஷை ஒற்றை தாயாக வளர்த்து வரும் இவர், தனது மாமனார் திருவேங்கடத்தையும் கவனித்து கொள்கிறார்.

  தன்னைத் தவிர மற்ற அனைவரையும் நேசிக்கும் அவர் எப்போதுமே தன் மீது குறைந்த கவனம் செலுத்தும் பெண்மணி. தனது மகன் சந்தோஷுக்கு பவித்ராவை திருமணம் செய்து வைக்கிறார். லட்சுமியின் மருமகள் பவித்ரா எப்படி லட்சுமியின் வாழ்க்கையில் ஒரு சிறிய மகிழ்ச்சியைக் கொண்டுவர முயல்கிறார். லட்சுமி எப்படி சமையல்காரர் ஹரி கிருஷ்ணனை காதலித்தார் என்பதை பற்றிய கதை தான் புதுப்புது அர்த்தங்கள்.  மாமனார் திருவேங்கடம் கதாபாத்திரத்தில் பிரபல பட்டிமன்ற நடுவர், திண்டுக்கல்.ஐ.லியோனி நடித்து வந்தார். இந்த நிலையில் சீரியலில் இருந்து இவர் விலகி இருக்கிறார். சமீபத்தில் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி தமிழக அரசால் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பிறகு தான் லியோனி தற்போது சீரியலில் இருந்து வெளியேறி இருக்கிறார். அவருக்கு பதிலாக வேறொரு நடிகர் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

  ALSO READ |  வடிவேலுவை வைத்து ஷங்கரை பழிவாங்க லைகா திட்டம்?

  லியோனிக்கு பதிலாக நடிக்கும் நடிகரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. அவர் வேறு யாருமில்லை நடிகர் ஜெயராஜ் தான் அந்த நடிகர். இவர் ஒரு கிடாயின் கருணை மனு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்கள் மற்றும் சீரியல் நடிகரான இவர் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: