முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / புலிக்குத்தி பாண்டி ஜனவரி 15-ம் தேதி நேரடியாக சன் டிவியில் ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

புலிக்குத்தி பாண்டி ஜனவரி 15-ம் தேதி நேரடியாக சன் டிவியில் ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

புலிக்குத்தி பாண்டி பட ஸ்டில்

புலிக்குத்தி பாண்டி பட ஸ்டில்

புலிக்குத்தி பாண்டி ஜனவரி 15-ம் தேதி நேரடியாக சன் டிவியில் வெளியாகிறது.

  • Last Updated :

புலிக்குத்தி பாண்டி ஜனவரி 15-ம் தேதி நேரடியாக சன் டிவியில் வெளியாகிறது.

குட்டிப்புலி கொம்பன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘புலிகுத்தி பாண்டி’.

கும்கி பட வெற்றிக் கூட்டணியான லட்சுமி மேனன் - விக்ரம் பிரபு ஆகியோர் மீண்டும் இணைந்துள்ள இத்திரைப்படத்தை சன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, ரகுநந்தன் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்

மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பை தொடங்கி ஒரே கட்டமாக ஒட்டுமொத்த ஷூட்டிங்கையும் முடித்த படக்குழு டிசம்பர் 30-ம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது. அதைத்தொடர்ந்து பொங்கலுக்கு ஜனவரி 15-ம் தேதி மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் நேரடியாக ‘புலிக்குத்தி பாண்டி’ ரிலீசாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கன்னட படமான மாயாபஜார் 2016 படம் தமிழில் ‘நாங்க ரொம்ப பிஸி’ என்ற டைட்டிலில் ரீமேக் செய்யப்பட்டு நவம்பர் 14-ம் தேதி தீபாவளி அன்று காலை 11 மணிக்கு நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பானது. பத்ரி இயக்கத்தில் பிரசன்னா, ஷாம், அஸ்வின், யோகி பாபு, ஸ்ருதி மராத்தே உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

' isDesktop="true" id="391797" youtubeid="j3OGs4w_mTk" category="entertainment">

மேலும் படிக்க: ரசிகர்கள் மற்றும் மக்களை மனதில் வைத்து அஜித் எடுத்த அதிரடி முடிவு?

கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் மூடப்பட்டிருந்த போது ஓடிடி தளங்கள் மூலமாக புதிய திரைப்படங்கள் வெளியாகின. ஓடிடி தளங்களைத் தொடர்ந்து தொலைக்காட்சியிலும் நேரடியாக புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன.

உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்

First published:

Tags: Kollywood, Lakshmi Menon, Vikram Prabhu