குட்டிப்புலி கொம்பன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘புலிகுத்தி பாண்டி’.
கும்கி பட வெற்றிக் கூட்டணியான லட்சுமி மேனன் - விக்ரம் பிரபு ஆகியோர் மீண்டும் இணைந்துள்ள இத்திரைப்படத்தை சன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, ரகுநந்தன் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்
மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பை தொடங்கி ஒரே கட்டமாக ஒட்டுமொத்த ஷூட்டிங்கையும் முடித்த படக்குழு இறுதிக்கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வந்தது. இந்நிலையில் டிசம்பர் 30-ம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதையடுத்து படக்குழுவினருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்தப் படத்தை ஜனவரி 1-ம் தேதி தியேட்டரில் ரிலீஸ் செய்து பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பலாம் என தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகின. இப்போது நேரடியாக பொங்கலுக்கு சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு பின்னர் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் படக்குழு இதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இயக்குனர் @dir_muthaiya இயக்கத்தில், @iamVikramPrabhu மற்றும் #LakshmiMenon நடிப்பில் "புலிக்குத்தி பாண்டி" படத்தின் First Look!#PulikkuthiPandi #SunTV #PKPFirstLook pic.twitter.com/nKSH31qgIX
— Sun TV (@SunTV) December 30, 2020
முன்னதாக ‘நாங்க ரொம்ப பிஸி’படமும் இதே போல் சன் டிவியில் ஒளிபரப்பாகி பின்னர் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kollywood, Lakshmi Menon, Vikram Prabhu