முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / டி.ஆர்.பி-யில் தெறிக்க விட்ட 'புலிக்குத்தி பாண்டி'!

டி.ஆர்.பி-யில் தெறிக்க விட்ட 'புலிக்குத்தி பாண்டி'!

புலிக்குத்தி பாண்டி

புலிக்குத்தி பாண்டி

தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக சன் டிவி-யில் ஒளிபரப்பானது புலிக்குத்தி பாண்டி.

  • Last Updated :

பொங்கலுக்கு ஒளிபரப்பான புலிக்குத்தி பாண்டி டி.ஆர்.பி-யில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது.

மாட்டுப் பொங்கல் சிறப்பு படமாக கடந்த 15-ம் தேதி, விக்ரம் பிரபுவின் புலிக்குத்தி பாண்டி திரைப்படம் சன் டிவி-யில் ஒளிபரப்பானது. இயக்குநர் முத்தையா இயக்கியிருந்த இந்தப் படத்தில் லட்சுமி மேனன் கதாநாயகியாக நடித்திருந்தார். தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக சன் டிவி-யில் ஒளிபரப்பானது புலிக்குத்தி பாண்டி.

பொங்கல் தினத்தன்று சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஒளிபரப்பானது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்த படம் முதலில் ஓடிடி தளத்தில் வெளியானது. அதன் பிறகு தான் டிவி-யில் ஒளிபரப்பப்பட்டது. இந்தப் படத்தில் சூர்யாவின் நடிப்பு பெரியளவில் பாராட்டுகளையும் பெற்றது.

டிவி-யில் ஒளிபரப்பான இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் சூரரைப் போற்று திரைப்படத்தை விட, விக்ரம் பிரபுவின் புலிக்குத்தி பாண்டி படம் டிஆர்பி-யில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது. இதனை ட்விட்டரில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார், புலிக்குத்தி பாண்டி பட ஹீரோ விக்ரம் பிரபு!

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Vikram Prabhu