புகழை ஷகீலாவிடம் கோர்த்து விட்ட வெங்கடேஷ் பட்!

புகழை ஷகீலாவிடம் கோர்த்து விட்ட வெங்கடேஷ் பட்!

குக் வித் கோமாளி 2

இந்த வாரம் ஒளிபரப்பான எபிசோடில், குக்கும் கோமாளியும் திரும்பி நின்று அவர்கள் வயிற்றுப் பகுதியை ஒரு கயிறால் கட்டிவிட்டு, இருவரும் மாறி மாறி சமைக்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.

  • Share this:
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

தற்போது இதன் 2-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஷகிலா, பாபா பாஸ்கர், தர்ஷா குப்தா, பவித்ரா லக்‌ஷ்மி, அஸ்வின், கனி திரு உள்ளிட்டோர் போட்டியாளர்களாக களம் இறங்கியிருக்கிறார்கள். இவர்களை இம்சை செய்யும் கோமாளிகளாக சிவாங்கி, புகழ், பாலா, மணிமேகலை, சுனிதா உள்ளிட்டோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.

இதில் புகழ் மற்றும் சிவாங்கி இருவரின் காமெடிக்கு என்றே மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக குக் வித் கோமாளி சனிக்கிழமை மட்டும் தான் ஒளிபரப்பானது. அதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளானார்கள்.இதற்கிடையே இந்த வாரம் ஒளிபரப்பான எபிசோடில், குக்கும் கோமாளியும் திரும்பி நின்று அவர்கள் வயிற்றுப் பகுதியை ஒரு கயிறால் கட்டிவிட்டு, இருவரும் மாறி மாறி சமைக்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் புகழும், ஷகீலாவும் ஒரு அணியாக செயல்பட்டனர். ஷகீலா சமைத்துக் கொண்டிருக்க, பின்னால் திரும்பி நின்றிருந்த புகழை வம்பிழுந்தார் ஜட்ஜ் வெங்கடேஷ் பட்.

’ரம்யா பாண்டியன் இருக்கும் போது மட்டும் இன்னும் டைட்டா கட்டுங்கன்னு சொன்ன, இப்போ ஷகீலானதும் மூஞ்ச சுழிக்கிற’ என புகழை சீண்டினார். அதற்கு ஷகீலாவும் விளையாட்டாக கோபித்துக் கொண்டார்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: