Malik Movie: மாலிக் படத்துக்கு எதிராக கேரளாவில் போராட்டம்..

மாலிக்

பகத் பாசில் நடித்த மாலிக் படத்திற்கு எதிராக கேரளாவில் போராட்டம் நடத்தப்பட்டது.போராட்டத்தில் படத்துக்கும், அதனை இயக்கிய மகேஷ் நாராயணனுக்கும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

  • Share this:
    பகத் பாசில் நடிப்பில், மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஓடிடியில் நேரடியாக வெளியான திரைப்படம், மாலிக். இந்தப் படத்தில் திருவனந்தபுரத்தை அடுத்துள்ள, பீமாபள்ளி வியாபாரிகளை தவறாக சித்தரித்திருப்பதாகக்கூறி பீமாபள்ளியில் போராட்டம் நடத்தப்பட்டது.

    2009 இல் திருவனந்தபுரத்தையடுத்த கடற்கரை நகரான பீமாபள்ளியில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். பீமாபள்ளி முஸ்லீம்களுக்கும், செறியாத்துறை கிறிஸ்தவர்களுக்கும் இடையில் நடந்த மோதலை தவிர்க்க போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்பட்டது.



    ஆனால், அது பொய் என்பது அப்போதே அம்பலமானது. போலீசார் வேண்டுமென்றே நடத்திய சட்டத்துக்கு புறம்பான படுகொலை அது என்பதை அப்போதைய இடதுசாரி அரசும் ஒப்புக் கொண்டது. இதனை மையப்படுத்தி மாலிக் திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. பீமாபள்ளி ரமாதாப்பள்ளியாகவும், செறியாத்துறை எடவத்துறையாகவும் படத்தில் காட்டப்பட்டிருந்தது.



    Also Read : ரூ.1,87,700 சம்பளம்.. தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிப்பது எப்படி!

    பீமாபள்ளியில் அனைத்துவித வெளிநாட்டுப் பொருள்களும் கிடைக்கும். வெளிநாட்டுப் பொருள்களின் விற்பனையே அங்கு அதிகம். மாலிக்கில், அப்பொருள்கள் கடல்வழி கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக காட்டப்பட்டிருந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பீமாபள்ளி வியாபாரிகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் படத்துக்கும், அதனை இயக்கிய மகேஷ் நாராயணனுக்கும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.



    மாலிக் திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் இப்போது பார்க்கக் கிடைக்கிறது. விரைவில் ஏஷியாநெட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Tamilmalar Natarajan
    First published: