மாஸ்டர் திரைப்படத்தின் வியாபார பேச்சுவார்த்தையில் இழுபறி

மாஸ்டர்

மாஸ்டர் திரைப்படத்தின் வியாபார பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.

  • Share this:
மாஸ்டர் திரைப்படத்தின் வியாபாரம் முழுவதும் மார்ச் மாதமே முடிந்துவிட்ட நிலையில், டிஜிட்டல் சாட்டிலைட் திரையரங்கு உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் விற்கப்பட்டு விட்டன. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக திட்டமிட்டப்படி ஏப்ரல் மாதம் மாஸ்டர் வெளியாகவில்லை. தற்போது பொங்கலுக்கு திரைப்படம் வெளியாக இருப்பதால் மீண்டும் வியாபாரம் தொடங்கி இருக்கிறது. ஆனால் முன்பு பேசிய தொகையை இப்போது கொடுக்க முடியாது என வினியோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஊரடங்கு அமலில் உள்ளதால் திரையரங்குகளுக்கு மக்கள் வருவதில்லை என்பதாலும் அரசு கட்டுப்பாடுகளும் அமலில் இருக்கின்றன என்பதாலும் தயாரிப்பாளர்களிடம் விநியோகஸ்தர்கள் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ஓடிடி நிறுவனங்கள் அதிக விலைக்கு படத்தை வாங்க முன்வந்தும் விஜய் விரும்பாததால் திரையரங்குகளுக்கு கொடுக்க விரும்புகிறன்றனர் தயாரிப்பாளர்கள். திரையரங்கு உரிமையாளர்களும் திரையரங்குகளுக்கு படத்தை கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க...தியேட்டரில் மாஸ்டர் ரீலிஸ்.. மகிழ்ச்சியில் தனுஷ் பதிவிட்ட ட்வீட்

பொங்கலுக்கு திரைப்படம் வெளியாகா விட்டால் நஷ்டம் மேலும் அதிகமாகும் என்பதால் அதற்குள் சுமூக தீர்வு ஏற்படுத்த தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: