• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மாநாடு படம் த்ரில்லிங், மாஸ் என்டர்டெயினர் - தயாரிப்பாளர் மகிழ்ச்சி!

மாநாடு படம் த்ரில்லிங், மாஸ் என்டர்டெயினர் - தயாரிப்பாளர் மகிழ்ச்சி!

மாநாடு பட போஸ்டர்

மாநாடு பட போஸ்டர்

படத்தை திரையரங்கில் மட்டுமே வெளியிடுவது என்பதில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உறுதியாக உள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் த்ரில்லிங் மற்றும் மாஸ் என்டர்டெயினராக இருக்கு என்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

எட்டிக்காயாக தொடங்கி நெல்லிக்காயாக முடிந்ததில் மகிழ்ச்சி. மாநாடு படத்தைப் பற்றிதான் சொல்கிறோம். சிம்புவின் ஒத்துழையாமையால் படமே ஒத்தி வைக்கப்பட்டு, பஞ்சாயத்துகள் நடத்தி, சத்தியங்கள் வாங்கி சிலபல களேபரங்களுக்குப் பிறகே மாநாடு டேக் ஆஃப் ஆனது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதை முறியடித்து இனிப்புடன் நிறைந்திருக்கிறது மாநாடு. தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள மகிழ்ச்சிக் குறிப்பே சான்று.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தை சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் மூலம் தயாரித்துள்ளார். டப்பிங் முடிந்து அவரும், சிம்புவும் படத்தை பார்த்துள்ளனர். "மங்காத்தாவை உருவாக்கியவர் த்ரில்லிங் மாஸ் என்டர்டெயினருடன் திரும்பி வந்திருக்கிறார். எங்கள் பாசத்துக்குரிய இயக்குனருக்கு நன்றி. அற்புதமான நடிப்பை எஸ்.ஜே.சூர்யா தந்துள்ளார்" என மாநாடு தந்த மகிழ்ச்சியை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் சுரேஷ் காமாட்சி. ஒய்.ஜி.மகேந்திரன், கல்யாணி ப்ரியதர்ஷிணி ஆகியோரின் நடிப்பையும் அவர் பாராட்டியுள்ளார்.

Also read... ஸ்டண்ட் சில்வா இயக்கத்தில் நடிக்கும் ரீமா கல்லிங்கல்...!

சிம்பு நடிப்பில் கடைசியாக வந்த ஈஸ்வரன் உள்பட எந்தப் படமும் வெற்றி இலக்கை தொடவில்லை. வெங்கட்பிரபுவுக்கும் இப்போது பின்னடைவே. சென்னை 28, சரோஜா, மங்காத்தா போன்ற வெற்றி கிடைத்து ஒரு வருடங்களாகிறது. இரண்டு பேருக்கும் மாநாடு ஒரு 'பிரேக்'கை தரும் என்று நம்புகிறார்கள். படத்தை திரையரங்கில் மட்டுமே வெளியிடுவது என்பதில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உறுதியாக உள்ளார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: