ரஜினி, கமலை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர் பாஜகவில் இணைந்தார்

news18
Updated: July 11, 2018, 6:57 PM IST
ரஜினி, கமலை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர் பாஜகவில் இணைந்தார்
பி.எல்.தேனப்பன்
news18
Updated: July 11, 2018, 6:57 PM IST
நடிகர்கள் கமல், ரஜினியை வைத்து படம் தயாரித்த, திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான தேனப்பன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.

காரைக்குடியை பூர்வீகமாக கொண்ட தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் பம்மல் கே சம்பந்தம், காதலா காதலா ஆகிய படங்களை கமல்ஹாசனை வைத்து தயாரித்துள்ளார். முத்து , படையப்பா ஆகிய ரஜினிகாந்தின் படங்களையும் தயாரித்துள்ளார். இவர் நேற்று முன்தினம் பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா தலைமையில் பாஜக-வில் இணைந்துள்ளார். அப்போது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை, தேசிய செயலர் எச்.ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

பாஜக-வில் இணைந்தது குறித்து தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் கூறுகையில், சிறு வயதிலேயே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டேன். ஆர்.எஸ்.எஸ் உடனான தொடர்பு எனக்கு கேரளாவில் பள்ளிப்படிப்பு படிக்கும் போது ஏற்பட்டது. திரைத்துறையில் என்னுடன் இணைந்து பணியாற்றிய ரஜினி,கமல் ஆகியோர் அரசியலுக்கு வந்துவிட்டனர். இருந்தாலும் பாஜக திரைத்துறைக்கு நன்மை செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதனால் தான் கட்சியில் இணைந்துள்ளேன் என்று கூறினார். மேலும் பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக நடிகர் பொன்னம்பலம், விஜயகுமார், காயத்ரி ரகுராமன் ஆகிய திரைத்துறை பிரபலங்கள் 2014 - ம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு பாஜக-வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
First published: July 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...