செக்கை இன்னும் திருப்பித் தரவில்லை - சிம்பு மீது புதிய குற்றச்சாட்டு

சிம்பு

நடிகர் சிம்பு மீது புதிய குற்றச்சாட்டு ஒன்றை வீசியிருக்கிறார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.

 • Share this:
  பிரிக்க முடியாதது எதுவோ என்று தருமி பாணியில் கேட்டால் சிம்புவும் சிக்கலும் என்று கண்ணை மூடி கூறிவிடலாம். சிம்புவினால் தமிழ் திரையுலகே தயாரிப்பாளர்கள் சங்கம் ஒருபுறமும் பெப்சி இன்னொருபுறமுமாக பிரிந்து நிற்கிறது. இதில் புதிய குற்றச்சாட்டு ஒன்றை வீசியிருக்கிறார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.

  இவரது அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட சிம்பு, படப்பிடிப்புக்கு ஒழுங்காக வராமல் இழுத்தடித்து, பல கோடிகளை நஷ்டப்படுத்தினார். இரு பாகங்களாக தொடங்கப்பட்ட படம் இது. முதல் பாகத்துக்கே தயாரிப்பாளரையும், இயக்குனரையும் மூச்சுத்திணற வைத்த சிம்பு, இரண்டாம் பாகம் எல்லாம் கிடையாது, இருப்பதை வைத்து வெளியிடுங்கள் என்று கைவிட, அரையும் குறையுமாக வெளியானது படம். தயாரிப்பாளருக்கு கடும் நஷ்டம். சிம்புவால் சுமார் 20 கோடிகள் நஷ்டம், அதை அவர் திருப்பித் தர வேண்டும் என தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் போர்க்கொடி தூக்கினார். அவ்வப்போது அந்த பஞ்சாயத்து விஸ்வரூபமெடுக்கும்.

  சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தில் நடிப்பதை முன்னிட்டு இந்த பஞ்சாயத்து மீண்டும் சபைக்கு வந்தது. சிம்பு அட்வான்ஸ் வாங்கி, கால்ஷீட் தராத மேலும் 3 தயாரிப்பாளர்கள் இதில் இணைந்து கொண்டனர். சிம்புவுக்கு பதில் அவரது அம்மா உஷா ராஜேந்தர் பஞ்சாயத்தில் கலந்து கொண்டார். பிரச்சனைக்கு இதுவரை எந்தத் தீர்வும் எட்டவில்லை.

  Kayadu Lohar to play Simbu Silambarasan TR's pair in Vendhu Thanindhathu Kaadu, Gautham Menon, Jayamohan, Vendhu Thanindhathu Kaadu, simbu Vendhu Thanindhathu Kaadu, ar rahman Vendhu Thanindhathu Kaadu, Vendhu Thanindhathu Kaadu simbu gautham menon, Vendhu Thanindhathu Kaadu kayadu lohar, சிம்பு, கெளதம் மேனன், வெந்து தணிந்தது காடு, வெந்து தணிந்தது காடு சிம்பு, வெந்து தணிந்தது காடு காயாடு லோஹர், ஜெயமோகன்

  Also Read : ரோபோ சங்கருக்கு குவியும் பாராட்டு.. ஏன் தெரியுமா ?

  இந்நிலையில், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்துக்காக சிம்புவுக்கு பேசிய சம்பளத்தில் 3.5 கோடியை இன்னும் மைக்கேல் ராயப்பன் தரவில்லை என்று பேட்டியளித்தார் உஷா ராஜேந்தர். அதற்கு பதிலளித்திருக்கும் மைக்கேல் ராயப்பன், சிம்பு இன்னொரு படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் போட கேட்டுக் கொண்டேன். அதற்காகத்தான் 75 லட்சம் தருவதாக கூறினேன். அவருக்கு தந்ததில் ஒரு செக் பவுன்ஸானது. அந்தத் தொகையை மறுநாளே டிடி எடுத்து தந்துவிட்டேன். ஆனால், சிம்பு இன்னும் அந்த செக்கை திருப்பித் தராமல் வைத்துள்ளார் என்று புதிய குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார்.

  சிம்பு பஞ்சாயத்துக்கே தனி நிதிமன்றம் திறக்க வேண்டிவரும் போல.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: