பிரபல தயாரிப்பாளரின் மகளுக்கு கொரோனா உறுதி - தனிமைப்படுத்திக் கொண்ட குடும்பத்தினர்!

தயாரிப்பாளர் கரீம் மொரானி

 • Share this:
  பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரீம் மொரானியின் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  ஷாரூக்கான் நடித்த ரா ஒன், சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் கரீம் மொரானி. இவரது மகள் ஷாஜா சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று மும்பைக்கு திரும்பியுள்ளார்.

  ஆரம்பத்தில் அவருக்கு கொரோனா அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றும், நேற்று திடீரென அவருக்கு அறிகுறிகள் தென்பட்டதால் சோதனை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதில் அவருக்கு தொற்று பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  இதையடுத்து மும்பை நானாவதி மருத்துவமனையில் ஷாஜியா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கரீம் மொரானி குடும்பத்தில் உள்ள அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  இந்தியாவில் இதுவரை 4,281 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 318 பேர் குணமடைந்துள்ளனர். 111 பேர் மரணமடைந்துள்ளனர். வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

  மேலும் படிக்க: ‘கோ கொரோனா’... விஷ்ணு விஷால் பகிர்ந்த முண்டாசுப்பட்டி மீம்!  Published by:Sheik Hanifah
  First published: