பிரபல தயாரிப்பாளரின் தாயார் மரணம் - திரையுலகினர் இரங்கல்
தயாரிப்பாளர் தனஞ்செயனின் தாயார் ஜகதம்மாள் காலமானார். அவருக்கு வயது 89.

தாயார் உடன் தனஞ்செயன்
- News18 Tamil
- Last Updated: June 1, 2020, 6:37 PM IST
நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர், விநியோகஸ்தர் என கலைத்துறையில் பன்முகத் திறமை கொண்டவர் தனஞ்செயன். இவர் BOFTA என்ற ஃபிலிம் இஸ்டியூட்டையும் நடத்தி வருகிறார்.
சமீபத்தில் மிஸ்டர்.சந்திரமௌலி, காற்றின் மொழி உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது தயாரிப்பில் உருவாகின. அதைத்தொடர்ந்து பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, நாசர் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகும் கபடதாரி படத்தைத் தயாரித்து வருகிறார்.
சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இயங்கும் தனஞ்செயன், தனது தாயார் இன்று காலை மரணமடைந்ததாக ட்வீட் செய்துள்ளார். மேலும் அந்த பதிவில், எனக்கு எல்லாமுமாக இன்று வரை இருந்த என் அன்பு அன்னை ஜகதம்மாள், இன்று காலை அமைதியாக என்னை விட்டு பிரிந்தார். அவரின் ஆசிகள் என்றுமே என்னுடன் இருக்கும் என்ற நம்பிக்கையுடன்” பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து திரையுலகினர் பலரும் தனஞ்செயனின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: காட் மேன் வெப்சீரிஸ் இயக்குநர், தயாரிப்பாளர் மீது வழக்குப் பதிவு; நேரில் ஆஜராக சம்மன்

My mother Jagadammal, who was everything to me till now, passed away peacefully today morning. She was 89. எனக்கு எல்லாமுமாக இன்று வரை இருந்த என் அன்பு அன்னை ஜகதம்மாள், இன்று காலை அமைதியாக என்னை விட்டு பிரிந்தார். அவரின் ஆசிகள் என்றுமே என்னுடன் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் 🙏🙏 pic.twitter.com/3ZK4vrfs5K
— Dr. Dhananjayan BOFTA (@Dhananjayang) June 1, 2020