முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ராகவா லாரன்ஸின் 'ருத்ரன்' திரைப்படத்தை இயக்கும் தயாரிப்பாளர்

ராகவா லாரன்ஸின் 'ருத்ரன்' திரைப்படத்தை இயக்கும் தயாரிப்பாளர்

ராகவா லாரன்ஸ்| ஃபைவ் ஸ்டார் கதிரேசன்

ராகவா லாரன்ஸ்| ஃபைவ் ஸ்டார் கதிரேசன்

ராகவா லாரன்ஸின் ருத்ரன் பட தயாரிப்பாளர் இயக்குநராக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான காஞ்சனா திரைப்படத்தின் மூன்றாவது பாகம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது. அதைத்தொடர்ந்து அக்‌ஷய்குமார், கியாரா அத்வானி நடிப்பில் காஞ்சனா முதல் பாகத்தை இந்தியில் லட்சுமி பாம் என்ற டைட்டிலில் ரீமேக் செய்தார் ராகவா லாரன்ஸ். சமீபத்தில் இத்திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.

ராகவா லாரன்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 29-ம் தேதி அவர் அடுத்ததாக தான் நடிக்க இருக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘ருத்ரன்’ என்ற திரைப்படத்தில் லாரன்ஸ் நடிக்க இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இயக்குநர் பெயரை அறிவிக்காமல் சஸ்பென்ஸ் வைத்தது படக்குழு.

எப்போதும் போல நடிகர் லாரன்ஸ் தான் இத்திரைப்படத்தை இயக்க இருக்கிறார் என்று ரசிகர்கள் நினைத்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ‘ருத்ரன்’ பட தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசனே இத்திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் அடித்த பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களை தயாரித்த கதிரேசன் அடுத்ததாக மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘அய்யப்பனும் கோஷியும்’ ரீமேக் உரிமையையும் வாங்கி வைத்திருக்கிறார். ஆனால் அத்திரைப்படத்தின் தமிழ் ரீமேக் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியானாலும் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

‘ருத்ரன்’ படத்துக்கு முன்பாகவே ‘சந்திரமுகி 2’ படத்தில் தான் நடிக்க இருப்பதாக கூறியிருந்தார் ராகவா லாரன்ஸ்.

உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..

First published:

Tags: Actor Raghava lawrence, Kollywood