தயாரிப்பாளர் சங்க கணக்குகள் தொடர்பாக விளக்கம் அளிக்க விஷாலுக்கு நோட்டீஸ்

தயாரிப்பாளர் சங்க கணக்குகள் தொடர்பாக விளக்கம் அளிக்க விஷாலுக்கு நோட்டீஸ்

நடிகர் விஷால்

தயாரிப்பாளர்கள் சங்க கணக்குகள் தொடர்பாக விளக்கம் அளிக்க நடிகர் விஷாலுக்கு தணிக்கைக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

  • Share this:
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை நடிகர் விஷால் இருந்து வந்தார். பின்னர் 2019-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்படாததால் தமிழக அரசு தலையிட்டு சங்க பொறுப்புகளை தனி அலுவலர் மஞ்சுளாவிடம் ஒப்படைத்தது. அப்போதே சங்க கணக்குகள் அனைத்தையும் மஞ்சுளாவிடம் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு ஒப்படைத்தார்.

தற்போது சங்கத்துக்கு தேர்தல் நடத்தப்பட்டு முரளி தலைமையிலான நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் விஷாலிடம் கணக்குகள் தொடர்பான விளக்கத்தை கேட்டு தனி அலுவலரும் தணிக்கை குழுவினரும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். விஷால் பொறுப்பில் இருந்தபோது செய்யப்பட்ட வரவு செலவு கணக்குகள் தொடர்பான விளக்கத்தினை தனி அலுவலரிடம் ஒப்படைக்குமாறு அந்த நோட்டீஸில் இருப்பதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது.

மேலும் படிக்க: பிக்பாஸ் கவினுக்கு கல்யாணமா? மணப்பெண் பற்றி வெளியான தகவல்

மேலும் படிக்க: திருவண்ணாமலை தீபத்தை தரிசித்த நடிகை சஞ்சிதா ஷெட்டி

இதுதொடர்பாக நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு விளக்கம் அளித்துள்ள விஷால் தரப்பினர் டிஜிட்டல் முறையில் கணக்குகள் அனைத்தையும் முறையாக பராமரித்து இருக்கிறோம். நாங்கள் செய்த செலவுகள் அனைத்துமே சங்க உறுப்பினர்களின் நலனுக்காக மட்டுமே செய்யப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளனர். தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்த வைப்புநிதி முழுவதும் காணாமல் போய்விட்டதாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிர்வாகம் ஏற்கனவே குற்றம்சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: