ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மறைந்த நடன மாஸ்டர் சிவசங்கருடனான நினைவலைகளை பகிரும் தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி

மறைந்த நடன மாஸ்டர் சிவசங்கருடனான நினைவலைகளை பகிரும் தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி

Producer Azhagan Tamilmani

Producer Azhagan Tamilmani

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மறைந்த நடன மாஸ்டர் சிவசங்கருடனான நினைவலைகளை பகிர்ந்துள்ளார் தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நடன இயக்குநரும், நடிகருமான சிவசங்கர் மாஸ்டர், அவரது மனைவி மூத்த மகன் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் AlG மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் சிவசங்கர் மாஸ்டர் கொரோனா பாதிப்பால் ஆபத்தான நிலையிலிருந்து இருந்து வந்தார். சிகிச்சையில் இருந்த நடன மாஸ்டர் சிவசங்கர் மாரடைப்பால் நேற்றிரவு காலமானார்.

திருடா திருடி படத்தில் வரும் மன்மதராசா பாடல் மூலமாக பெரிதும் பேசபட்டவர் சிவங்கர் மாஸ்டர். அஜித் வரலாறு படத்தில் பரத நாட்டியம் ஆடும் கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய உதவியாகவும் அஜித்திற்கு தனிப்பட்ட நடனப் பயிற்சியும் கொடுத்தவர் இவர் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார்.

800க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய சிவசங்கர், ‘மகதீரா’ படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி:

சிவசங்கர் மாஸ்டரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், சென்சார் போர்டு உறுப்பினருமான தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி, சிவசங்கர் மாஸ்டருடனான நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.

தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி கூறியதாவது, “மறைந்த சிவசங்கர் ஒரு சிறந்த பக்திமான். சாலிகிராமத்தில் ஓலைக் கொட்டகையில் சாதாரண புற்றுக் கோவிலாக இருந்த, தற்போது பிரசித்தி பெற்று விளங்கும் புத்துமாரியம்மன் கோவிலை பெரிதாக எடுத்து கட்டியதில் மாஸ்டர் சிவசங்கரின் பங்கு பெரியது. நான், சிவசங்கர் மாஸ்டர், நடிகை ரம்பா, முன்னாள் நடிகை ஜெயபாரதி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ஆகியோர் இணைந்து தான் அந்தக் கோவிலை கட்டினோம். சினிமாக்காரர்கள் அனைவருக்கும் கண் கண்ட தெய்வமாக திகழும் அந்தக் கோவிலில் தினமும் சாமி கும்பிடாமல் அவர் எங்குமே வெளியில் சென்றதில்லை.

Also read:  உகாண்டாவிடம் வேலையைக் காட்டிய சீனா: ஒரே விமான நிலையமும் பறிபோகும் அபாயம்..

திருப்பதி வெங்கடாசலபதி மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். கோவில் கோவில்களாக சென்று தெய்வங்களை தரிசிப்பதில் அதிக நாட்டத்துடன் இருந்தவர். இன்றைய தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டர்களாக இருக்கும் பாதி பேர் அவரிடம் ஜூனியராக இருந்தவர்கள் தான்.

அழகன் தமிழ்மணி

எனது தயாரிப்பில் சித்திரைப் பூக்கள், அன்பே உன் வசம் ஆகிய படங்களுக்கு அவர் நடன மாஸ்டராக பணியாற்றியிருக்கிறார். எனது மகன் தமிழ் நம்பி (இயக்குனர்), டி.ராஜேந்தரின் மகன் சிம்பு (நடிகர்), சிவசங்கர் மாஸ்டரின் மூத்த மகன் விஜய் கிருஷ்ணா (நடன இயக்குனர்) மூவரும் அண்ணை வேளாங்கண்ணி பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். அனைவரிடமும் மிகவும் பாசமாக பழகக் கூடியவர் சிவசங்கர். எங்களில் ஒருவராக இருந்தவர், அவரின் இறப்பு பேரதிர்ச்சியாக இருக்கிறது. அவரின் குடும்பத்திற்கும், திரைத்துறையினருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்திச் சென்றுவிட்டார்.

நடிகரும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் மூத்த செயற்குழு உறுப்பினர், சென்சார் போர்டு உறுப்பினராக இருந்து வரும் அழகன் தமிழ்மணி ரஜினியின் அன்புள்ள ரஜினிகாந்த், மலையூர் மம்பட்டியான் போன்ற பல திரைப்படங்களை தயாரித்தவர். மேலும் சன் டிவியில் பிரபலமான ‘மங்கை’ சீரியல் உள்ளிட்ட சில சீரியல்களையும் தயாரித்துள்ளார்.

First published:

Tags: Entertainment