முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பிக் பாஸில் ஓயாத நிரூப் - பிரியங்கா சண்டை.. வெளியேற போவது யார்?

பிக் பாஸில் ஓயாத நிரூப் - பிரியங்கா சண்டை.. வெளியேற போவது யார்?

 பிரியங்காவை பார்த்து நிரூப், கேமிற்கு நீங்கள் உண்மையாக இல்லை என கூறுகிறார்.

பிரியங்காவை பார்த்து நிரூப், கேமிற்கு நீங்கள் உண்மையாக இல்லை என கூறுகிறார்.

பிரியங்காவை பார்த்து நிரூப், கேமிற்கு நீங்கள் உண்மையாக இல்லை என கூறுகிறார்.

  • Last Updated :

    விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் தொடங்கி 86 நாட்களை கடந்து சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகும் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக நமீதா மாரிமுத்து வெளியேறினார். இதனை தொடர்ந்து, நாடியா , அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி, அபிஷேக், இமான் அண்ணாச்சி, அபிநய் ஆகியோர் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

    இதனிடையே சஞ்சீவ் மற்றும் அமீர் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்தனர். மேலும் கடந்த வாரம் டபுள் எவிக்சன் நடைபெற்ற நிலையில் வருண், அக்ஷ்ரா வெளியேறினர். இதனால் தற்போது இந்த நிகழ்ச்சியில் ராஜு ஜெயமோகன், பிரியங்கா, பாவ்னி, தாமரை செல்வி, சிபி, நிரூப், சஞ்சீவ் மற்றும் அமீர் ஆகிய 8 போட்டியாளர்கள் உள்ளனர்.

    இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய டாஸ்கான டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் இந்தவாரம் தொடங்கியுள்ளது. இதில் முதல் டாஸ்கில், யார் இந்த டிக்கெட்டை பெற தகுதியானவர்கள் இல்லை என்பதை முடிவு செய்ய வேண்டும் என போட்டியாளர்களிடம் கேட்கப்பட்டது. இதில் நிரூபை அனைவரும் சேர்த்து வெளியேற்றினர்.

    இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் டிக்கெட் டு ஃபினாலேவின் இரண்டாவது டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் ஒவ்வொருத்தருக்கும் தலா 10 முட்டைகள் கொடுத்து இதனை சக போட்டியாளர்கள் உடைக்க வேண்டும் அல்லது அதனை எடுத்து தங்கள் கூட்டில் வைத்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டது. இறுதியாக யார் இருவரின் கூடையில் குறைவான முட்டைகள் இருக்கிறதோ அவர்கள் இருவரும் இந்த டாஸ்கில் இருந்து வெளியேற்றப்படுவார் என கூறப்பட்டது. அதன்படி தாமரை மற்றும் பாவ்னி வெளியேற்றப்பட்டனர்.

    இதனால் இன்றைய டாஸ்கில் ராஜு, பிரியங்கா, அமீர், சஞ்சீவ் மற்றும் சிபி ஆகியோர் போட்டியிடுவது இன்று வெளியான முதல் ப்ரோமோவில் இருந்தது. அதில் போட்டியாளர்களின் உருவம் இருக்கும் போர்டு ஒன்று வைக்கப்பட்டிருந்தது கலர் தண்ணீர் நிறைந்த பலூன்கள் கொடுப்பட்டு அறிவிக்கும் வாசகம் யாருக்கும் பொருந்துமோ அவர்களது போர்டு மீது அதனை உடைக்குமாறு கூறப்படுகிறது.

    ' isDesktop="true" id="651823" youtubeid="N2T5iP_O1T8" category="entertainment">

    இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், வெற்றி பெறக்கூடாது என நீங்கள் நினைக்கும் நபர் யார்? என பிக் பாஸ் கேட்கிறார். அதற்கு  வெற்றி பெறக்கூடாது என நான் யாரையும் நினைக்கவில்லை, நான் தோற்றாலும் பரவாயில்லை என கூறி பிரியங்கா தனது புகைப்படம் மீது எறிந்து கொள்கிறார்.

    இதனை பார்த்த நிரூப், கேமிற்கு நீங்கள் உண்மையாக இல்லை என பிரியங்காவிடம் கூறுகிறார். அதற்கு பிரியங்கா, நான் யாரையும் கீழே தள்ள விரும்பவில்லை என்கிறார். நான் தகுதி இல்லாத நபர் என கூறி என்னை வெளியே அனுப்பினீர்கள், அப்போ நீங்கள் தகுதியானவர் என்பதை நிரூப்பிக்க வேண்டும் அல்லவா? என கேள்வி எழுப்பும் காட்சிகள் உள்ளது.

    இதையும் படிங்க. அமீர் - பாவ்னி உறவை பற்றி பேசி சண்டையில் சிக்கிய பிரியங்கா!

    முன்னதாக இரண்டாவது ப்ரோமோவில், தான் வெற்றி பெறுவதற்காக பாவ்னி மீது இருக்கும் அன்பை அமீர் ஆயுதமாக பயன்படுத்தி கொள்வதாக கூறி பிரியங்கா, அமீர் மீது பலூனை எறிகிறார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அமீர், பாவ்னி மீது இருக்கும் அன்பு வேறு, நான் விளையாட வந்திருப்பது வேறு என கூறி, நீ என்மீது வைத்திருக்கும் அன்பு தற்போது எனக்கு பொய்யாக தெரிகிறது என கூறி பிரியங்கா மீது எறிகிறார்.

    இதையும் படிங்க..மரணத்திற்கு பிறகும் ரசிகர்கள் மத்தியில் வாழும் விஜே சித்ரா!

    இதனை கேட்டு, நீ கடைசி வரியை கூறாமல் இருந்திருக்கலாம், தேவையில்லாமல் வார்த்தைகளை விட வேண்டாம் என பிரியங்கா கூறும் காட்சிகள் உள்ளது. அமீர், பாவ்னி இருவரிடமும் பிரியங்கா நட்பாக பழகும் நிலையில் அவரே இப்படி கூறியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இன்றும் மோதல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வாரம் போட்டியாளர்கள் அனைவரும் நாமினேஷனில் இருப்பதால் யார் வெளியேறுவார்? என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

    top videos

      உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

      First published: