சூர்யாவுக்கு ஜோடியாகும் சிவகார்த்திகேயன் ஹீரோயின்!

சூர்யாவுக்கு ஜோடியாகும் சிவகார்த்திகேயன் ஹீரோயின்!

பிரியங்கா மோகன் - சூர்யா

இதையடுத்து வெற்றி மாறனின் வாடி வாசல் படத்தில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 • Share this:
  கடந்த வருடம் இயக்குநர் பாண்டிராஜுடன் சூர்யா நடிக்கும் அடுத்தப்படம் அறிவிக்கப்பட்டது. அப்போதிலிருந்து இந்தப் படத்தில் யார் ஹீரோயின் என்ற கேள்வி எழுந்தது. இப்போது சிவகார்த்திகேயன் பட நாயகியின் பெயர் அடிபடுகிறது.

  சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகவுள்ள பிரியங்கா மோகன், எஸ்40 என்று அழைக்கப்படும் சூர்யாவின் அடுத்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

  “இந்த படம் ஒரு கிராமப்புறத்தை மையப்படுத்திய அதிரடி பொழுதுபோக்கு படமாக இருக்கும். நன்றாக நடிக்கும் ஒரு நடிகையை தேர்வு செய்ய படக்குழு பார்த்துக் கொண்டிருந்தது. கடைசியில் அவர்கள் பிரியங்காவை டிக் செய்துள்ளனர். தற்போது படத்தின் முந்தைய கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பிப்ரவரியில் படபிடிப்புக்கு செல்லும் யோசனை உள்ளது. தயாரிப்பாளர்கள் படப்பிடிப்பு இடங்களையும் இறுதி செய்து விட்டார்கள். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்” என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  இதற்கிடையில், சூர்யா தற்போது பத்திரிகையாளர்-இயக்குனர் ஞானவேலின் படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். "அவர் அந்த படத்தில் ஒரு நீட்டிக்கப்பட்ட சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். அடுத்ததாக பாண்டிராஜின் திரைப்படத்தைத் தொடங்கி, ஒரே அட்டவணையில் படப்பிடிப்பை முடிப்பார் எனத் தெரிகிறது. இதையடுத்து வெற்றி மாறனின் வாடி வாசல் படத்தில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: