பிரியங்கா காந்தியின் உதவியாளர் மீது பிக்பாஸ் புகழ் இளம்பெண் ஒருவர் கொடுத்த பாலியல் புகாரின் பேரில் அவர் மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரின் மகளும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவராகவும் இருப்பவர் பிரியங்கா காந்தி வத்ராவின் உதவியாளராக சந்தீப் சிங் என்பவர் பணிபுரிந்து வருகிறார். அவர் மீது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அர்ச்சனா கவுதமின் தந்தை மீரட் மாவட்டம் பர்தாபூர் காவல்நிலையத்தில் அதிர்ச்சி புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் சந்தீப் சிங் தன் மகளிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாகவும், அதோடு தனது மகளுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் அர்ச்சனா கவுதம் அண்மையில் பிரியங்கா காந்தியை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது அவரது உதவியாளர் தன்னிடம் நடந்து கொண்ட விதம் குறித்து பிரியங்காவிடமும் அர்ச்சனா முறையிட்டதாக தெரிகிறது. இதன் பிறகு சந்தீப் சிங் மீது பர்தாபூபு காவல்துறையினர் ஐபிசி 504 மற்றும் 506 ஆகிய பிரிவுகளிலும், வன்கொடுமைத் தடுப்புச் சட்ட உள்ளிட்ட பிரிவுகளிலும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அண்மையில் தனது முகநூலில் நேரலையில் பேசிய அர்ச்சனா சிங், சந்தீப் சிங்கின் அநாகரீகமான செயல் குறித்து பிரியங்காவிடம் முறையிட தான் பல முறை முயன்றதாகவும், ஆனால் சந்தீப் சிங் அதையெல்லாம் தடுத்துவிட்டதாகவும், இப்போது வாய்ப்பு கிடைத்ததால் பிரியங்கா காந்தியிடம் தான் முறையிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
பல்வேறு தடைகளை மீறி தான் பிரியங்காவை சந்தித்த போது தான் கூறியவற்றைக் கேட்டு அதிர்ச்சியடைந்ததாகவும், அவரே தன்னை காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறியதாகவும் அர்ச்சனா குறிப்பிட்டுள்ளார். தனக்கு நேர்ந்ததை காங்கிரஸ் தலைவர்கள் சிலரிடம் தான் முறையிட்ட போதும், யாரும் தனக்கு முன்வரவில்லை என்றும், இந்த விவகாரத்தை அப்படியே விட்டுவிட தன்னை வலியுறுத்தியதாகவும் அர்ச்சனா குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துபவர்களை பிரியங்கா காந்தி ஏன் தன் அருகில் இருக்க அனுமதிக்கிறாரோ எனக் கேள்வி எழுப்பிய அர்ச்சனா, இந்த விவகாரம் தொடர்பாக இனி ஊடகங்களில் பேசினால் தன்னை கைது செய்து சிறையில் அடைத்து விடுவேன் அண்மையில் கூட சந்தீப் சிங் தனக்கு மிரட்டல் விடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் பொது வெளியில் தெரியத் தொடங்கிய பிறகு மீரட் மாவட்டம் பர்தாபூர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணையை தொடங்கியுள்ளனர். தன்னைப் போலவே எத்தனையோ சாதாரண தொண்டர்கள் பிரியங்கா காந்தியை நேரில் சந்தித்து தங்கள் குறைகளை சொல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் அர்ச்சனா தனது நேரலையில் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Congress, Priyanka Gandhi, Sexual abuse