அந்தக் குடும்பத்தின் வலியை கற்பனைக்கூட செய்ய முடியவில்லை. குற்றவாளி தப்பித்துவிடக்கூடாது - ப்ரியங்கா சோப்ரா
இரட்டை மரணத்தைச் சந்தித்த அக்குடும்பத்தின் நிலையை கற்பனை கூட செய்யமுடியவில்லை. குற்றவாளி தண்டிக்கப்படாமல் போய்விடக்கூடாது என்று தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருக்கிறார் பாலிவுட், ஹாலிவுட் நடிகையான ப்ரியங்கா சோப்ரா.

ப்ரியங்கா சோப்ரா
- News18 Tamil
- Last Updated: June 27, 2020, 1:21 PM IST
இரட்டை மரணத்தைச் சந்தித்த அக்குடும்பத்தின் நிலையை கற்பனை கூட செய்யமுடியவில்லை. குற்றவாளி தண்டிக்கப்படாமல் போய்விடக்கூடாது என்று தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருக்கிறார் பாலிவுட், ஹாலிவுட் நடிகையான ப்ரியங்கா சோப்ரா.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பெனிக்ஸ், போலீசாரின் தாக்குதலால் உயிரிழந்த விவகாரம் தற்போது தேசிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
”சாத்தான்குளத்தில் நடந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டு மிகுந்த துன்பமும், அதிர்ச்சியும் அடைந்தேன். கோபத்தில் உறைந்திருக்கிறேன். எந்த மனிதருக்கும் இப்படி ஒரு கொடுமை நடக்க வேண்டியதில்லை.

குற்றம் செய்தவர் நிச்சயம் தண்டிக்கப்படாமல் போய்விடக்கூடாது. அந்தக் குடும்பத்திற்கு பிரார்த்தனைகளையும், வலிமை கிடைக்க வேண்டும் என்னும் பிரார்த்தனைகளையும் சமர்ப்பிக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
#JusticeForJayarajandBennicks pic.twitter.com/vGi8m63If2
— PRIYANKA (@priyankachopra) June 26, 2020