கணவரின் ஆல்பத்தில் நடிக்கும் பிரியங்கா சோப்ரா!

Web Desk | news18
Updated: March 1, 2019, 8:04 PM IST
கணவரின் ஆல்பத்தில் நடிக்கும் பிரியங்கா சோப்ரா!
Web Desk | news18
Updated: March 1, 2019, 8:04 PM IST
டிசம்பரில் நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்ட பிரியங்கா சோப்ரா திருமணத்திற்குப் பிறகான தன் திரையுலக வரவை ரசிகர்களுக்கு பகிர்ந்து கொண்டார். அதில் திருமணத்திற்கு பின் நிக் ஜோனஸ் கம் பேக் பிரதர்ஸ் என்கிற ஹாஷ் டாக்குடன் சிங்கில் டிராக்கை வெளியிட்டுள்ளனர். அதில் பிரியங்கா சோப்ராவும் நடித்துள்ளார். இதை மிகவும் நெகிழ்ச்சியாக பகிர்வில் தெரிவித்துள்ளார்.
 
View this post on Instagram

 

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on


தி ஜோனஸ் பிரதர்ஸ் என அழைக்கப்படும் நிக், ஜோய், கெவின் ஜோனஸ் மூவரும்தான் இந்தப் பாடலை இசையமைத்துப் பாடியுள்ளனர். ஜோய், கெவின் இருவரும் நிக் ஜோனஸின் உடன் பிறந்தவர்களாவர். இவர்கள் ’சக்கர்’ என்கிற சிங்கில் டிராக்கை மட்டும் வெளியிட்டுள்ளனர். அதில் பிரியங்காவும் நடித்துள்ளார். இதில் என்ன ஒரு ஹைலைட் என்றால் பிரியங்கா மட்டுமல்ல மற்ற இருவரின் மனைவிகளும் அதில் நடித்துள்ளனர்.

நிக்கின் மூத்த அண்ணன் கெவினின் மனைவி டேனியல், தம்பி ஜோய் மனைவி சோஃபி. இவர் கேம் ஆஃப் த்ரோன்ஸில் நடித்தவர். அவர்களுடன் நிக் மற்றும் பிரியங்கா என குடும்பமே இணைந்து இந்தப் பாடலில் நடித்துள்ளது.
இதை பிரியங்கா தன் இஸ்டாகிராம் பக்கத்தில் “ நாங்கள் முவரும் குடும்பபமாக இணைந்து நடித்திருப்பது இதுதான் முதல் முறை. ஒரு இடத்தில் கூட ஷூட்டிங் ஸ்பாட் போன்று இல்லை. குடும்பமாக சேர்ந்து கெட்டுகெதர் போன்றுதான் இருந்தது. அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. என் கணவரை நினைத்தால் பெருமையாக இருக்கிறது “ என பகிர்ந்துள்ளார். 
View this post on Instagram

 

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on


இந்த பாடல் மூன்று கணவர்களும் தத்தம் மனைவி மீது கொண்ட காதலை வெளிப்படுத்துவது போன்றதாகும். பாடலின் வரிகளும் அப்படித்தான் அமைந்துள்ளன. பாடலும் ஒண்டர்லேண்ட் தீமில் எடுக்கப்பட்டுள்ளது. உணவு உண்பது, நடனம் ஆடுவது என பாடலின் வீடியோ டிராக்கில் ஆங்காங்கே தென்படுகின்றன.
First published: March 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...