Home /News /entertainment /

'இந்திய உணவுப் படைவீரர்கள் அவர்கள்தான்..' - விவசாயிகள் போராட்டத்துக்கு பிரியங்கா சோப்ரா ஆதரவு..

'இந்திய உணவுப் படைவீரர்கள் அவர்கள்தான்..' - விவசாயிகள் போராட்டத்துக்கு பிரியங்கா சோப்ரா ஆதரவு..

ப்ரியங்கா சோப்ரா

ப்ரியங்கா சோப்ரா

மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திவரும் ‘டெல்லி சலோ’ போராட்டத்திற்கு நடிகை பிரியங்கா சோப்ரா ஆதரவு தெரிவித்துள்ளார்.

    மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திவரும் ‘டெல்லி சலோ’ போராட்டத்திற்கு நடிகை பிரியங்கா சோப்ரா ஆதரவு தெரிவித்துள்ளார். மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறச்சொல்லி  பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா மாநில விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் ’டெல்லி சாலோ’ போராட்டத்திற்கு உறுதுணையாக பல மாநிலங்களிலும் விவசாயிகளின் போராட்டங்கள் வலுத்துக்கொண்டிருக்கின்றன.

    டிசம்பர் 8-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் இந்தியா முழுக்க வேலை நிறுத்தத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    அரசியல் மட்டும் இல்லாமல் சினிமா,விளையாட்டுத்துறையைச் சேர்ந்த பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அதிகமான சர்ச்சை ட்வீட்களைச் செய்யும் கங்கனா ரனாவத், 100 ரூபாய்க்கு போராட்டங்களில் கலந்துகொள்ள பாட்டி வருவதாக சர்ச்சையை எழுப்பியிருந்தார்.

    இந்நிலையில், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவின் உணவுப் படைவீரர்கள் விவசாயிகள்தான். அவர்களின் அச்சங்களை அரசு தீர்க்கவேண்டும். அவர்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்யவேண்டும். இந்த சிக்கல்கள் அனைத்தும் விரைவில் தீர்க்கப்படுவது உறுதி செய்யப்படவேண்டும்” என்று விவசாயிகளுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.
    Published by:Gunavathy
    First published:

    Tags: Delhi, Delhi chalo, Farmers Protest, Haryana, Kangana Ranaut, Priyanka Chopra, Punjab

    அடுத்த செய்தி