மனிதாபிமானத்துக்கான விருது... பிரியங்கா சோப்ராவுக்கு யுனிசெஃப் அங்கீகாரம்...!

நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது ‘தி வொய்ட் டைகர்’ என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மனிதாபிமானத்துக்கான விருது... பிரியங்கா சோப்ராவுக்கு யுனிசெஃப் அங்கீகாரம்...!
பிரியங்கா சோப்ரா
  • News18
  • Last Updated: December 4, 2019, 3:16 PM IST
  • Share this:
பாலிவுட் முதல் ஹாலிவுட் வரையில் கலக்கி வரும் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு யுனிசெஃப்-ன் மனிதாபிமானத்துக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

யுனிசெஃப் நல்லெண்ணத் தூதராகக் கடந்த 2006-ம் ஆண்டு செயல்பட்டு வருகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஆரோக்கியம், கல்வி, பெண்கள் நல உரிமை, பாலின சம உரிமை, பெண்ணியம் சார்ந்து செயல்பட்டு வருகிறார் பிரியங்கா. சமூக அக்கறையோடு பல சூழல்களிலும் செயல்பட்டு வரும் பிரியங்காவை கவுரவிக்கும் வகையில் யுனிசெஃப் விருது கொடுக்கப்பட்டுள்ளது.

யுனிசெஃப் ’ஸ்நோஃப்ளேக் பால்’ நிகழ்வில் பிரியங்காவுக்கு ’டேனி கே மனிதாபிமான விருது’ நேற்று மாலை வழங்கப்பட்டது. இதுகுறித்து பிரியங்கா தனது ட்விட்டர் பக்கத்தில், “மிகவும் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன். டேனி கே மனிதாபிமான விருதின் மூலம் என்னை அங்கீகரித்து யுனிசெஃப்-க்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது ‘தி வொய்ட் டைகர்’ என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அரவிந்த அடிகா எழுதிய ‘தி வொய்ட் டைகர்’ என்னும் நாவலின் அடிப்படையில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் பார்க்க: இந்திய கிரிக்கெட் அணி கேப்டனின் பயோபிக்... தயாராகிறார் நடிகை டாப்ஸி!
First published: December 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading