சர்வதேச அளவில் நம்பர் 1 படமாக மாறியுள்ள "தி ஒயிட் டைகர்": உற்சாகத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா!

நடிகை பிரியங்கா சோப்ரா

அரவிந்த் அதிகா எழுதி 2008 ஆம் ஆண்டு புக்கர் விருது வாங்கிய “தி ஒயிட் டைகர்” நாவலை அடிப்படையாக வைத்து ராமின் பஹ்ரானி இந்த படத்தை இயக்கியுள்ளார்.

 • Last Updated :
 • Share this:
  பாலிவுட்டில் தடம் பதித்து தற்போது ஹாலிவுட் திரையுலகில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா, அவர் தற்போது செம உற்சாகத்தில் இருக்கிறாராம். அதற்கு காரணம் சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அவர் நடிப்பில் வெளியான தி ஒயிட் டைகர் படம் உலகளவில் நம்பர் ஒன் படமாக மாறியுள்ளது என்பதால் தான். தனது படம் மாபெரும் வெற்றியை கண்டதால் உற்சாகத்தில் மூழ்கிய பிரியங்கா தனது ரசிகர்களுக்கு நன்றிகளை தெரிவித்து வருகிறார்.

  நெட்ஃபிக்ஸ்-ல் மிகவும் பிரபலமான படங்களின் சமீபத்திய தரவரிசையில் தி ஒயிட் டைகர் முதல் இடம்பிடித்துள்ளது. இதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை பிரியங்கா செவ்வாயன்று (ஜன.26) ஸ்டோரீஸாக பதிவிட்டிருந்தார். அதில் தி ஒயிட் டைகர் முதலிடத்திலும், அதன்பின் அவுட் சைட் தி வயர் மற்றும் பிரியங்கா நடித்த மற்றொரு ஹாலிவுட் படமான வி கேன் பி ஹீரோஸ் என்ற படங்கள் வரிசை படுத்தப்பட்டிருந்தன.

  மேலும் அந்த ஸ்டோரிசில் அவர் பதிவிட்டிருந்தாவது, "#TheWhiteTigerNetflix என்பது உலகளவில் நெட்ஃபிக்ஸ்-ல் நம்பர் 1 படமாக இருப்பதைக் காண மிகவும் உற்சாகமாக இருக்கிறது !! அனைவரின் ஆதரவிற்கும் மிக்க நன்றி. படத்தை பார்த்துக் கொண்டே இருங்கள். படம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியப்படுத்துங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

  நடிகை பிரியங்கா சோப்ரா


  அரவிந்த் அதிகா எழுதி 2008 ஆம் ஆண்டு புக்கர் விருது வாங்கிய “தி ஒயிட் டைகர்” நாவலை அடிப்படையாக வைத்து ராமின் பஹ்ரானி இந்த படத்தை இயக்கியுள்ளார்.

  இதில் புதுமுக நடிகர் ஆதர்ஷ் கவுரவ் கதாநாயகனாகவும், பிரியங்கா மற்றும் ராஜ்குமார் ராவ் துணை நடிகர்களாகவும் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தை பிரியங்கா சோப்ரா இணைந்து தயாரித்துள்ளார். பரவலான விமர்சனங்கள் மற்றும் பாராட்டுகளுடன் கடந்த ஜனவரி 22ம் தேதி அன்று தி ஒயிட் டைகர் வெளியானது. ஓடிடி தளத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது. இந்த நிலையில், நேற்று (ஜன.26) அறிமுக நடிகர் ஆதர்ஷ் சிறந்த ஆண் முன்னணி பிரிவில் Independent Spirit விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

  பிரியங்காவின் இன்ஸ்டா ஸ்டோரி


  மேலும் அவார்ட் செஷனில் சிறந்த துணை நடிகர்கள் பிரிவுகளில் பிரியங்கா மற்றும் ராஜ்குமார் பெயரை சேர்க்க நெட்ஃபிக்ஸ் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரியங்கா இப்போது தனது அடுத்த படமான ருஸ்ஸோ பிரதர்ஸின் Citadel மற்றும் தி மேட்ரிக்ஸ் 4 படங்களில் நடித்து வருகிறார். சிட்டாடல் படத்தில் கேம் ஆப் த்ரோன்ஸ் மற்றும் பாடிகார்ட் புகழ் ரிச்சர்ட் மேடன் ஆகியோர் நடிக்கின்றனர்.

  பிரியங்கா சோப்ரா தமிழில் நடிகர் விஜயுடன் இணைந்து ‘தமிழன்’ படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Arun
  First published: