Priyanka Chopra: நியூயார்க்கில் சொந்தமாக ரெஸ்டாரண்ட் திறந்த பிரபல நடிகை!

ப்ரியங்கா சோப்ரா

நியூயார்க் சிட்டியில் சோனா என்ற ரெஸ்டாரண்டை ப்ரியங்கா சோப்ரா திறந்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நட்சத்திரங்கள் நடித்துக் கொண்டே சைடு பிசினஸில் ஈடுபடுவது புதிதல்ல. விஜய் கல்யாண மண்டபங்கள் கட்டி வாடகைக்கு விடுகிறார். ஆர்யா ஹோட்டால் தொடங்கியிருக்கிறார். நெப்போலியன் சாப்ட்வேர் கம்பெனி வைத்துள்ளார். இந்த வரிசையில் நடிகை ப்ரியங்கா சோப்ரா நியூயார்க்கில் சொந்தமாக ரெஸ்டாரண்ட் ஒன்றை தொடங்கியுள்ளார்.

ப்ரியங்கா சோப்ரா 2000 இல் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் உலக அளவில் பெயர் பெற்றார். 2003 இல் இந்திப் படத்தில் நடிக்க ஆரம்பித்தார். தமிழில் விஜய்யுடன் தமிழன் படத்தில் நடித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2015 இல் ஹாலிவுட்டில் தயாரான டிவி தொடர் குவான்டிகோவில் நடிக்க ஆரம்பித்ததும் அவரது வாழ்க்கை மாறியது. 2018 வரை அத்தொடரில் நடித்தார். யுஎஸ் பாப் பாடகர் நிக் ஜோனஸை அதே ஆண்டு  திருமணம் செய்து கொண்டார். அத்தோடு அவர் ஒரு அமெரிக்கப் பிரஜையாகவே மாறினார். யுஎஸ்ஸில் பல கோடிகள் மதிப்பில் பிரமாண்ட வீடு ஒன்றையும் வாங்கினார்.

Also read... Dhanush: புதிய வீட்டிற்கு 150 கோடி செலவிடும் தனுஷ்...?

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ப்ரியங்கா சோப்ரா, கடைசியாக தி வொயிட் டைகர் படத்தில் நடித்தார். இந்தப் படத்தயாரிப்பிலும் அவர் பங்கு உண்டு. தற்போது நியூயார்க் சிட்டியில் சோனா என்ற ரெஸ்டாரண்டை ப்ரியங்கா சோப்ரா திறந்துள்ளார். இது அவரது சொந்த ரெஸ்டாரண்ட். தொடர்ந்து நடிப்பு, தயாரிப்பு என இயங்கிக் கொண்டே ஹோட்டல் தொழிலையும் விஸ்தரிக்க இருக்கிறாராம்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: