பிரிட்டன் அரச குடும்பத்தின் குட்டி இளவரசரை சந்திக்கவில்லை - மறுக்கும் பிரியங்கா சோப்ரா

மேகன் - பிரிய்ஙகா நட்பில் விரிசலா என்ற கேள்விக்கும் பிரியங்கா மறுப்புத் தெரிவித்துள்ளார்.

Web Desk | news18
Updated: June 1, 2019, 2:14 PM IST
பிரிட்டன் அரச குடும்பத்தின் குட்டி இளவரசரை சந்திக்கவில்லை - மறுக்கும் பிரியங்கா சோப்ரா
பிரியங்கா- மேகன் மார்க்லே
Web Desk | news18
Updated: June 1, 2019, 2:14 PM IST
பிரிட்டன் இளவரசி மேகன் மார்க்லேவையும் அவரது மகன் ஆர்சியையும் சந்திக்கவில்லை என நடிகை பிரியங்கா சோப்ரா மறுப்புத் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரி- மேகன் மார்க்லே தம்பதியருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு ஆர்சி எனப் பெயரிட்டனர்.

அரச குடும்பத்தின் புதிய இளவரசர் ஆர்சியையும் தனது தோழி மேகன் மார்க்லேவையும் பிரியங்கா சோப்ரா சந்தித்து குழந்தைக்குப் பரிசு வழங்கினார் என்ற செய்தி உலகளவில் பரவியது.

ஆனால், இப்படியொரு சந்திப்பே நிகழவில்லை என பிரியங்கா சோப்ரா மறுத்துள்ளார். பிரியங்காவின் நீண்ட கால தோழியான மேகன் மார்க்லேவின் திருமணத்துக்கு பிரியங்கா சென்றிருந்தார்.

ஆனால், பிரியாங்கா- நிக் திருமணத்துக்கு மேகன் வராததால் மேகனின் வளைகாப்பு நிகழ்வுக்கு பிரியங்கா செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், மேகன் - பிரிய்ஙகா நட்பில் விரிசலா என்ற கேள்விக்கும் பிரியங்கா மறுப்புத் தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க: 

First published: June 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...