கணவர் நிக் ஜோனஸ்-உடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய ப்ரியங்கா சோப்ரா..

கணவர் நிக் ஜோனஸ்-உடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய ப்ரியங்கா சோப்ரா..

கணவருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை ப்ரியங்கா சோப்ரா.

கணவருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை ப்ரியங்கா சோப்ரா.

 • Share this:
  நடிகை ப்ரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனஸுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  நடிகை ப்ரியங்கா சோப்ரா 2000 ஆம் ஆண்டு மிஸ் வேல்டு பட்டம் வென்றவர். 2002 ஆம் ஆண்டு வெளியான தமிழன் திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து நடித்திருந்தார். அதன் பின் பாலிவுட்டில் கால் பதித்த ப்ரியங்கா சோப்ரா மேரி கோம், பர்ஃபி, தோஸ்தானா, பாஜிராவ் மஸ்தானி என பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். உண்மையை கதையை தழுவி ப்ரியங்கா சோப்ரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘தி ஸ்கை இஸ் பிங்க்’ திரைப்படம் மாபெரும் வெற்றிப்பெற்றது.

  2018 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த பாடகரான நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இருவரும் கலிஃபோர்னியாவில் லாஸ் ஏன்ஜல்ஸ் மாகாணத்தில் வசித்து வருகின்றனர். தீபாவளி அன்று இருவரும் கையில் விளக்கு ஏந்தியபடி பதிவிட்ட புகைப்படம் வைரலானது.

  இந்நிலையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு லண்டன் சென்ற இருவரும் அங்கிருந்து கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படத்தை ப்ரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Tamilmalar Natarajan
  First published:

  சிறந்த கதைகள்