”ரசிகர்களுடன் படம் எடுத்துக் கொள்ளும் போது விஜய்யைப் பற்றி நினைத்தேன்...” பிரியங்கா சோப்ரா!

”ரசிகர்களுடன் படம் எடுத்துக் கொள்ளும் போது விஜய்யைப் பற்றி நினைத்தேன்...” பிரியங்கா சோப்ரா!

தமிழன் படத்தில் விஜய் - பிரியங்காசோப்ரா!

”விஜய்யின் பணிவு மற்றும் ரசிகர்களுடனான அவரது தாராள மனப்பான்மை, அவர் மீது எனக்கு ஒரு நீடித்த தோற்றத்தை ஏற்படுத்தியது"

 • Share this:
  நடிகை பிரியங்கா சோப்ரா 2000-ஆம் ஆண்டில் உலக அழகி பட்டத்தை வென்றதன் பின்னர் பல ஆண்டுகளாக பாலிவுட்டை ஆட்சி செய்து வருகிறார்.

  அதோடு ஹாலிவுட்டில் நுழைந்து அங்கும் அதிர்வுகளை உருவாக்கி, பெண்களுக்கு உத்வேகம் அளித்து வருகிறார். மஜித் இயக்கிய 'தமிழன்' திரைப்படத்தின் மூலம் தான் பிரியங்கா நடிகையாக அறிமுகமானார் என்பதில் தமிழ் சினிமா பெருமை கொள்ளலாம்.

  தற்போது பிரியங்கா சோப்ரா ’அன்ஃபினிஷ்டு’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் பொதுவாக தனது வாழ்க்கையிலும், திரையுலகிலும் பெற்ற பல நல்ல மற்றும் கெட்ட அனுபவங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஒரு சில இயக்குநர்களிடமிருந்து தனக்கு நடந்த கெட்ட அனுபவங்களை அவர் பேசியிருந்தாலும், அவரது முதல் ஹீரோ தளபதி விஜய்யைப் பற்றி பாஸிட்டிவான வார்த்தைகளில் குறிப்பிட்டுள்ளார்.

  ”விஜய்யின் பணிவு மற்றும் ரசிகர்களுடனான அவரது தாராள மனப்பான்மை, அவர் மீது எனக்கு ஒரு நீடித்த தோற்றத்தை ஏற்படுத்தியது" என்று குறிப்பிட்டுள்ளார் பிரியங்கா. மேலும் தொடர்ந்த அவர், பல ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்கள் அமெரிக்காவில் அவரைச் சந்திக்க வந்தபோது, 'குவாண்டிகோ' செட்டில்," மதிய உணவு இடைவேளையில் நான் அவர்களுடன் நின்று படங்களை எடுத்தபோது, எனது முதல் சக நடிகரைப் பற்றியும் அவர் அமைத்த முன்மாதிரியைப் பற்றியும் நினைத்தேன்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.

  இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் தங்கள் ஹீரோவை கொண்டாடி வருகிறார்கள்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: