கணவருடனான 10 வயது இடைவெளி குறித்து பகிர்ந்துகொண்ட பிரியங்கா சோப்ரா

கணவருடனான 10 வயது இடைவெளி குறித்து பகிர்ந்துகொண்ட பிரியங்கா சோப்ரா

கணவருடன் பிரியங்கா சோப்ரா

"நிக் தண்ணீருக்குள் இருக்கும் மீன் போல” இந்திய கலாச்சாரத்தை பிடித்துக் கொண்டதாகக் குறிப்பிட்டார்.

 • Share this:
  தனக்கும் தனது கணவர் நிக் ஜோனாஸுக்கும் இடையேயான 10 வருட வித்தியாசம் குறித்து முதன் முறையாக மெளனம் கலைத்திருக்கிறார் நடிகை பிரியங்கா சோப்ரா.

  நிக் ஜோனாஸுடனான திருமணத்திற்குப் பிறகு, தங்களின் கலாச்சார வேறுபாடுகள் மற்றும் வயது இடைவெளி குறித்து மிகவும் வெளிப்படையாகவே இருந்து வருகிறார் பிரியங்கா சோப்ரா. சமீபத்திய நேர்காணலில், வேறுபாடுகள் தங்கள் உறவில் 'ஒரு தடையாக இருந்ததாக இல்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.

  தற்போது லண்டனில் இருக்கும் பிரியங்கா, 'டெக்ஸ்ட் ஃபார் யூ' படப்பிடிப்பை முடித்துள்ளார். இதற்கிடையே தி சண்டே டைம்ஸுக்கு அளித்த பேட்டியில், 38 வயதான பிரியங்கா, தனக்கும் 28 வயதான நிக்கிற்கும் இடையிலான 10 வயது இடைவெளி, மற்றும் கலாச்சார வேறுபாடுகள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு இரண்டுமே தடையாக இல்லை என்று கூறினார் பிரியங்கா. "நிக் தண்ணீருக்குள் இருக்கும் மீன் போல” இந்திய கலாச்சாரத்தை பிடித்துக் கொண்டதாகக் குறிப்பிட்டார். ஆனால் ஒரு சாதாரண ஜோடியைப் போலவே, நீங்கள் ஒருவருக்கொருவர் பழக்கவழக்கங்களையும், விரும்புவதையும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே தடைகளை கண்டுபிடிக்க முயற்சிப்பதை விட இது ஒரு சிறந்த வழி என்றார். ஆக எது ஒன்றும் தங்கள் உறவில் கடினமாக இல்லை” என்றார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: