The Family Man 2 : சுச்சி - அரவிந்த் இடையே நடந்தது என்ன? பிரியாமணியின் சுவாரஸ்ய பதில்

தி ஃபேமிலி மேன் 2

ஹீரோக்களுக்கு இணையாக ரிஸ்க் எடுத்து அவர் சண்டைக் காட்சிகளில் நடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது

 • Share this:
  அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள தி ஃபேமிலி மேன் சீசன் 2 தொடர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த சீரீஸின் டிரெய்லர் வெளியான நாளில் இருந்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டை சேர்ந்த அரசியல் தலைவர்கள் அதனை தடை செய்ய வேண்டும் என குரல் எழுப்பினர். இது ஒருபுறம் இருக்க இந்த சீசனும் கடந்த சீசனைப் போலவே சுவாரஸியமாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  சாதாரண திரில்லர் தொடராக மட்டுமல்லாமல் கணவன், மனைவியான மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி இருவருக்கும் இடையேயான உறவுச்சிக்கல்களையும் பேசி ஒரு ஃபேமிலி டிராமாவாகவும் ரசிகர்களை ஈர்த்தது.

  இந்த சீசனில் நடிகை சமந்தா, மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நடிகை சமந்தா இந்த சீரிஸில் இலங்கைத் தமிழராக நடித்துள்ளார். ஹீரோக்களுக்கு இணையாக ரிஸ்க் எடுத்து அவர் சண்டைக் காட்சிகளில் நடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

  Also Read : கிளியோபாட்ரா போல் எனக்கும் மண் குளியல் பிடிக்கும் - வைரலாகும் பிரபல நடிகையின் படம்!

  இந்நிலையில் கடந்த சீசனில் சுச்சித்ராவாக நடித்துள்ள பிரியாமணி ஷரத் கெல்கருடன் அலுவலக பணி தொடர்பாக லோனாவாலா (Lonavala) செல்வார். அன்றிரவு இரவு இருவருக்குள்ளும் ஏதோ நடப்பது போல காட்டப்பட்டிருக்கும். ஆனால் என்ன நடந்தது என்பது தெளிவாகக் காட்டப்படாது. அவர்களுக்குள் என்ன நடந்தது என்ற ஆர்வம் ரசிகர்களுக்குள் எழுந்தது.

  இந்த சீசனிலாவது அது குறித்து விளக்கப்பட்டிருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் இந்த சீசனிலும் இதுகுறித்து விளக்கப்படாதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. இதுகுறித்து சமீபத்தில் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த பிரியாமணி, ''நான் உங்களுக்கு இரண்டு பதில் தருகிறேன். லோனாவாலாவில் என்ன நடந்தது என்பது லோனாவில் தான் இருக்கிறது. செல்லம் சாரை கேளுங்கள். அவருக்கு பதில் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. காரணம் செல்லம் சாருக்கு எல்லாம் தெரியும். உங்களுக்கு என்ன வேண்டுமோ, அதனை எடுத்துக்கொள்ளுங்கள்'' என்றார்.

  மேலும் ஃபிலிம் கம்பேனியனுக்கு கிருஷ்ணா டிகே அளித்துள்ள பேட்டியில், ''ஸ்ரீகாந்திற்கு எப்பொழுது தெரிகிறதோ மக்களுக்கும் அப்பொழுது தான் தெரியும். ஸ்ரீகாந்திற்கு தெரியாதது பார்வையாளர்களுக்கும் தெரியாது. ஸ்ரீகாந்த்திற்கு ஒரு விஷயம் குறித்து சந்தேகம் அடைந்தால், பார்வையாளர்களும் சந்தேகப்படுவார்கள். ஸ்ரீகாந்த் தெரியாமல் பார்வையாளர்களுக்கு மட்டும் தெரிந்திருப்பது நல்லதில்லை'' என்றார்.

  Also Read :  த்ரில்லர்-ரொமான்ஸ் வெப் சீரிஸ் பிரியர்களுக்கு பிடிக்கும் ‘ஹூ கில்டு சாரா?’

  கொரோனாவின் தாக்கத்திற்கு பிறகு பலருக்கும் வீட்டிலேயே அடைந்து கிடக்க வேண்டிய சூழல் உருவானது. இதன் காரணமாக ஓடிடி தளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியது. மேலும் திரைப்படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியானது. வெப் சீரிஸ்களும் அதிகம் உருவாக்கப்பட்டன. தமிழ் இயக்குநர்களும் ஓடிடிக்கு திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் எடுப்பதில் ஆர்வம் காட்டத் துவங்கினர். ரசிகர்கள் தமிழ் மட்டுமல்லாமல், பல்வேறு மொழிகளில் உள்ள நல்ல கண்டென்ட்களை பார்த்து அது குறித்து சமூக வலைதளங்களில் விவாதிக்கத் துவங்கியுள்ளனர். இது ஒரு வகையில் ஆரோக்கியமான சூழலாக பார்க்கப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

   
  Published by:Vijay R
  First published: