சஞ்சய் லீலா பன்சாலி படத்தில் நடிக்க ஆசை: ப்ரியா பிரகாஷ் வாரியர்

news18
Updated: February 13, 2018, 6:48 PM IST
சஞ்சய் லீலா பன்சாலி படத்தில் நடிக்க ஆசை: ப்ரியா பிரகாஷ் வாரியர்
நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்
news18
Updated: February 13, 2018, 6:48 PM IST
நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியரின் பார்வையும், பாவனையும் கடந்த வார இறுதியில் நாடு முழுவதும் வைரல் ஆனது. ஒரு சிறு வீடியோ இணையத்தில் பரவி ஒரே இரவில் அவரை நட்சத்திரமாக மாற்றியது.

ப்ரியா பிரகாஷ் வாரியர் நடித்த ‘ஒரு அடார் லவ்’ என்ற படத்தில் உள்ள பாடல் காட்சியின் வீடியோ காதலர் தினத்தினை முன்னிட்டு வெளியிடப்பட்டது. அதன் பிறகு சமூக வலைதளங்களில் அதிகம் வைரலான அந்த வீடியோவின் மூலம் ப்ரியா பலரின் கனவு நாயகியாக மாறினார். இந்த வீடியோவை புகழ்ந்தும், கலாய்க்கும் விதமாகவும்  மீம்கள் பறந்தன.

இது குறித்து ப்ரியா பிரகாஷ் வாரியர் CNN-News18 இணையதளத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், இந்த வீடியோ காட்சியின் மூலம் பிரபலம் ஆனதுடன் தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் வாய்ப்புகள் அதிகரித்து வருவதாகக் கூறினார்.

மேலும், இது தன்னிச்சையாக நடந்தது என்றும், என் முதல் படமான இதில், இயக்குனர் என்னை சாதாரணமாக பாவனைகள் காட்ட சொன்னார், அது வைரலாக மாறிவிட்டதாகவும் கூறினார்.

வாரியர் எப்போதும் ஒரு நடிகையாகவே இருக்க விரும்புவதாகவும், பத்மவாத் இயக்குனரான சஞ்சய் லீலா பன்சலியுடன் வேலை செய்ய வேண்டும் என்பதே லட்சியம் என்றும் கூறினார்.

மேலும் பேசிய அவர், “நான் பாலிவுட்டில் வேலை செய்ய விரும்புகிறேன். எனது பாலிவுட் படத்தில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்குனராக பணிபுரிய வேண்டும் என்பதே ஆசை” என்றும் கூறினார்.

மலையாளம், தமிழ் மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் இன்னும் வேறு எந்த படத்திலும் கையெழுத்திடவில்லை என்றும் அவர் கூறினார்.
Loading...
சுவாரஸ்யமானது என்னவென்றால், வைரல் ஆக மாறும் எந்த நடிகர்களுக்கும்,  ஒரு ட்விட்டர் கணக்கு கூட இல்லை. ஆனால் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் உட்பட மற்ற சமூக ஊடகங்களில் மிகவும் தீவிரமாக உள்ளனர்.

விரைவில் முழுப்பாடலும், டீசரும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்படம் இரண்டு பள்ளி மாணவர்களுக்கு இடையேயான காதல் அல்லது நெருக்கமான நட்பை வெளிப்படுத்தும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
First published: February 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்