ஒரே பாடலில் வைரலான பிரியா வாரியார்!

news18
Updated: February 13, 2018, 9:08 AM IST
ஒரே பாடலில் வைரலான பிரியா வாரியார்!
மலையாள நடிகை பிரியா வாரியார்
news18
Updated: February 13, 2018, 9:08 AM IST
ஒரே பாடல் மூலம் லட்சக் கணக்கான ரசிகர்களைப் பெற்று மலையாள நடிகை பிரியா வாரியார் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகியுள்ளார்.

விரைவில் திரைக்கு வரவுள்ள `Oru Adaar Love’ என்ற மலையாளப் படத்தில் இடம்பெற்றுள்ள, "மாணிக்க மலராய பூவி" என்ற பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடல் வெளியான சில நேரங்களிலேயே சமூக வலைதளங்களில்  ஹிட் அடித்தது மட்டுமல்லாமல் இதில் நடித்த பிரியா வாரியார் டிவிட்டர் பக்கத்துக்கு 1.94 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்கள் கிடைத்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த பாடலில் 2 நிமிடங்களுக்கும் குறைவாக இடம்பெறும் பிரியா வாரியர் தான் கண்ணசைவில் லட்சக் கணக்கான ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். புருவத்தை அசைத்து ஒரு கண்வெட்டில் காதலைச் சொல்லும் அந்த காட்சிதான் இளைஞர்களின் நெஞ்சங்களில் நிறைந்து, சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளது.

கடந்த ஆண்டு `ஜிமிக்கி கம்மல்’ என்ற மலையாள பாடல் இந்தியா முழுவதும் வைரலானது. அதைத்தொடர்ந்து தற்போது  `மாணிக்க மலராயா’ என்ற பாடல் ஹிட் அடித்திருக்கிறது. ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு இசையமைத்த ஷான் ரஹ்மான்தான் இந்த பாடலுக்கும் இசையமைத்துள்ளார்.

 
First published: February 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...