போலி ட்விட்டர் பக்கம்... சிக்கித் தவிக்கும் பிரியா பவானி சங்கர்

ப்ரியா பவானி சங்கர்

எல்.ஜே.சூர்யாவுடன் இணைந்து பிரியா பவானி சங்கர் நடித்த மான்ஸ்டர் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  தனது பெயரில் ட்விட்டரில் போலி அக்கவுண்ட் வைத்துள்ளவருக்கு பதிலளித்துள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்

  தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றார் பிரியா பவானி சங்கர்.

  தற்போது சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்து இன்னும் பிரபலமாகியுள்ளார். மேயாத மான படம் மூலம் அறிமுகமான பிரியா பவானி சங்கர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் ஆகிய படங்களில் நடித்துள்ளார். எல்.ஜே.சூர்யாவுடன் இணைந்து இவர் நடித்த மான்ஸ்டர் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

  பிரியா பவானி சங்கர் பெயரில் ட்விட்டரில் பல போலி அக்கவுண்ட்கள் இருக்கின்றன. அதிலிருந்து சில தகவல்கள் பகிரப்பட்டு அவருடைய பெயரை கெடுப்பது போல் சில விஷயங்கள் செய்து வரப்படுகிறது.

  தற்போது இதேபோல் அவரது பெயரில் உள்ள அக்கவுண்ட் ஒன்றில் இருந்து, ‘மான்ஸ்டர் படம் அனைவருக்கும் பிடித்துள்ளது என்று நம்புகிறேன். உங்களது பாராட்டுகளுக்கு நன்றி என்று’ பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதுகுறித்து பிரியா பவானி சங்கர், ‘ உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தையும், பொறுப்பையும் நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் என்னை சங்கடப்படுத்துவதை உங்கள் வேலையாக வைத்துக்கொள்ளாதீர்கள். நன்றி’ என்று பதிவிட்டுள்ளார்  'றெக்க மட்டும் இருந்தா.. தேவதை!' - ப்ரியா பவானி சங்கர் ஆல்பம்...  Also watch

  Published by:Prabhu Venkat
  First published: