ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியானார் ப்ரியா பவானி சங்கர்

ராகவா லாரன்ஸ் | ப்ரியா பவானி சங்கர்

Priya Bhavani Shankar | ப்ரியா பவானி சங்கரின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ருத்ரன்’ படக்குழு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  • Share this:
ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான காஞ்சனா திரைப்படத்தின் மூன்றாவது பாகம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது. அதைத்தொடர்ந்து அக்‌ஷய்குமார், கியாரா அத்வானி நடிப்பில் காஞ்சனா முதல் பாகத்தை இந்தியில் லட்சுமி பாம் என்ற டைட்டிலில் ரீமேக் செய்தார் ராகவா லாரன்ஸ். சமீபத்தில் இத்திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.

ராகவா லாரன்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 29-ம் தேதி அவர் அடுத்ததாக தான் நடிக்க இருக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘ருத்ரன்’ என்ற திரைப்படத்தில் லாரன்ஸ் நடிக்க இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இயக்குநர் பெயரை அறிவிக்காமல் சஸ்பென்ஸ் வைத்தது படக்குழு.

எப்போதும் போல நடிகர் லாரன்ஸ் தான் இத்திரைப்படத்தை இயக்க இருக்கிறார் என்று ரசிகர்கள் நினைத்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ‘ருத்ரன்’ பட தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசனே இத்திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்நிலையில் இத்திரைப்படத்தில் நடிகை ப்ரியா பவானி சங்கர் இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ப்ரியா பவானி சங்கர், அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’, எஸ்.ஜே.சூர்யாவுடன் ‘பொம்மை’, ஹரிஷ் கல்யாணின் ஓ மணப்பெண்ணே, சிம்புவுடன் ‘பத்து தல’ உள்ளிட்ட ஏராளமான படங்களை கையில் வைத்திருக்கும் தற்போது ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’ திரைப்படத்தில் ஒப்பந்தமாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.





உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..
Published by:Sheik Hanifah
First published: