சிம்பு படத்தில் தாசில்தாராக நடிக்கும் ப்ரியா பவானி சங்கர்

சிம்பு | ப்ரியா பவானி சங்கர்

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிரியா.

  • Share this:
நடிகர் சிம்பு நடிக்கும் 'பத்து தல' என்ற படத்தில் தாசில்தாராக நடிக்கிறார் நடிகை ப்ரியா பவானி சங்கர்.

ப்ரியாபவானி சங்கருக்கு வரும் புத்தாண்டு படு சிறப்பாக இருக்கும் எனத் தெரிகிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ப்ரியா. அதோடு அதர்வாவுடன் 'குருதி ஆட்டம்', எஸ்.ஜே.சூர்யாவுடன் 'பொம்மை', ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக 'ஓமணப்பெண்ணே' போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் சிம்புவின் புதிய படத்திலும் ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக் நடிக்கும் படத்திற்கு 'பத்து தல' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் தாசில்தாராக நடிக்கிறாராம் ப்ரியா. ஆனால் யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

“ப்ரியா படத்தில் தாசில்தாராக நடிக்கிறார். அது ஒரு வலிமையான கதாபாத்திரம். சரியான விஷயம் எனத் தோன்றினால்  முடிவெடுக்க தயங்காத கதாபாத்திரம். தைரியத்துடன் கூடிய சுவாரஸ்யமான பாத்திரம்” என முன்னணி ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்திருக்கும் இயக்குநர் கிருஷ்ணா, இரண்டு வாரங்களுக்கு முன் ப்ரியா பவானி சங்கரை சந்தித்து, தனது படத்திற்கு 'டிக்' அடித்திருக்கிறார்.

கன்னடத்தில் வெளியாகி ஹிட் அடித்த 'மப்டி' படத்தின் தமிழ் ரீமேக் தான் 'பத்து தல'. கதைப்படி சிம்பு கதாபாத்திரத்திற்கு ஜோடி இல்லை. ஆகவே கெளதம் கார்த்திக்கிற்கு அவர் ஜோடியாகலாம் எனத் தெரிகிறது. 

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: