அஜித் பாடலுக்கு நடனமாடிய ப்ரியா பவானி சங்கர் - வைரலாகும் வீடியோ

நடிகை ப்ரியா பவானி சங்கர்

நடிகை ப்ரியா பவானி சங்கர் தற்போது மான்ஸ்டர் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்

 • News18
 • Last Updated :
 • Share this:
  ப்ரியா பவானி சங்கர் அஜித் பாடலுக்கு நடனமாடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

  இயக்குநர் ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ப்ரியா பவானி சங்கர் தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து அதன்பின்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

  தொடர்ந்து கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்த ப்ரியா பவானி சங்கர் குருதி ஆட்டம், மான்ஸ்டர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
  இந்நிலையில் சமீபத்தில் கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்ட இவர் நடிகர் அஜித்தின் வேதாளம் பட பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.


  வாக்காளர் விழிப்புணர்வுக்கான சிறப்பு பாடல் - வீடியோ

  Published by:Sheik Hanifah
  First published: